உஷார்...! உங்கள் மொபைலில் இந்த 5 செயலிகள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்
ஆன்டிராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துவர்களை குறிவைத்து ஹேக்கர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். உங்களுக்கே தெரியாமல், நீங்கள் பயன்படுத்தும் செயலிகள் (App) வழியாக நுழைந்து, தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விபரங்கள், பாஸ்வேர்களை அவர்களால் திருட முடியும். மேலும், திருடிய தகவல்களை வைத்து, உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக எடுத்துச் சென்றுவிடுவார்கள். தனிப்பட்ட தகவல்களை வைத்து மிரட்டவும் செய்வார்கள்.
அண்மையில், பைட் டிபெண்டர் (Bitdefender) நிறுவனம் நடத்திய ஆய்வில் ஹேக்கர்கள் நம்பத்தகுந்த செயலிகளின் வழியாக ஊடுருவுவதை கண்டுபிடித்துள்ளனர். கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஐபோன்களில் இருக்கும் செயலிகள் இத்தகைய ஹேக்கர்கள் நுழைவதற்கு அனுமதிப்பதில்லை. யூசர்களின் டேட்டாவை முழுமையாக பாதுகாப்பதில் அவர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருப்பதால், அதன் வழியாக ஹேக்கர்கள் ஊடுருவது எளிதான காரியமல்ல. ஆனால், கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே இருக்கும் செயலிகள் அல்லது ஒரிஜினல் செயலி போலவே இருக்கும் போலி செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது ஹேக்கர்கள் எளிதாக ஊடுருவல் செய்வதாக பைட் டிபெண்டர் தெரிவித்துள்ளது.
இணையதளங்களில் மக்களின் பெரும் மதிப்பை பெற்றுள்ள வி.எல்.சி மீடியா பிளேயர், ஆன்டி வைரஸ் போன்ற நம்பத்தகுந்த செயலிகளை போலியாக உருவாக்கி, அதன்மூலம் ஊடுருவி தகவல் திருட்டில் ஈடுபடுகின்றனர். நேரடியாக செல்போன்களுக்குள் நுழைவது மிகவும் கடினமாக இருப்பதால், இத்தகைய குறுக்கு வழிகளை பின்பற்றுவதாக பைட் டிபெண்டர் கூறியுள்ளது. யூசர்களை வளைக்கும் நோக்கில் இலவச மூவி, சீரிஸ்களை பார்க்கும் வசதி, கேம்களில் பங்கேற்கும் வசதி உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்து, யூசர்களை தங்கள் வலையில் ஹேக்கர்கள் விழ வைப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
1. அப்லிப்ட்; ஹெல்த் அன்ட் வெல்னஸ் செயலி (Uplift: Health and Wellness App)
2. புக் ரீடர் (BookReader)
3. பிளட்டோ டீவி (PlutoTV)
4. காஸ்பர்ஸ்கை; ப்ரீ ஆன்டிவைரஸ் (Kaspersky: Free Antivirus)
5. வி.எல்.சி மீடியா பிளேயர் (VLC MediaPlayer)
இந்த செயலிகளின் போலியை உருவாக்கி, ஹேக்கர்கள் ஊடுருவி வருகின்றனர். இந்த செயலியில் ஒரிஜினல் வெர்சனில் ஹேக்கர்கள் ஊடுருவ முடியாது. ஒருவேளை நீங்கள் கிராக் செய்யப்பட்ட அல்லது குறுக்கு வழியில் கிடைக்கும் இந்த செயலிகளை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கும். நீங்களும் ஹேக்கர்களின் பிடியில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. உடனடியாக, இந்த 5 செயலிகளையும் டெலிட் செய்துவிட்டு ஒரிஜினல் வெர்சன்களை பயன்படுத்துங்கள். மேலும், இனி வரும் காலங்களில் ஒரிஜினல் வெர்சன் தவிர, போலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.