ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலமாக ஜமாபந்தி மனுக்களை பெற உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!!
ஆன்லைனில் ஜமாபந்தி மனுக்கள் விண்ணப்பிப்பது எப்படி?முழு விவரம்
ஜமாபந்தி என்றால் என்ன ?
ஜமாபந்தி ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமம் தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும்
இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தங்கள் மற்றும் தங்கள் குறைகளை தீர்க்க மனு தரலாம்.
ஜமாபந்தியில் எதற்க்காக மனு அளிக்கலாம் ?
- பட்டா, சிட்டா, அடங்கல் குறித் தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம்.
- குடிநீர் வசதி, சாலைவசதி, மயான வசதி, கழிவுநீர் சாக்கடை வசதி ,முதலிய தேவைகள் குறித்தும் வருவாய் துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.
- இலவச மனைப்பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்
- வீட்டுமனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்
- குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
- ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.
இந்த வருவாய் தீர்வாயத்தில் பொது மக்களின் நியாயமான கோரிக்கைகள் மனுக்கள் உடனடியாக வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்படும்.
Petition Processing Portal (PPP) என்றால் என்ன?
மனு செயலாக்க போர்டல் Petition Processing Portal (PPP) என்பது மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் அவர்களின் அன்றாட அலுவலக பணிகளில். பொதுமக்கள் தங்கள் குறைகளின் மனுக்களை சமர்ப்பிக்கவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / ஆர்.டி.ஓ அலுவலகம் / தாலுகா அலுவலக கவுண்டர்கள், சி.எஸ்.சி மற்றும் ஆன்லைனில் உள்ள மனுக்களின் நிலையைப் பார்க்கவும் இது உதவுகிறது. மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர் எடுக்கும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வரை மனுக்களை முன்னும் பின்னுமாக வரிசைக்கு கீழே அனுப்பி மனுக்களை செயலாக்கும் அனைத்து துறைகளின் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் அனுப்பப்படுகின்றன. மனு செயலாக்கத்தை கலெக்டர் கண்காணிக்க முடியும். எந்தவொரு துறை / அமைப்பு / நகராட்சி அமைப்பினரும் தங்கள் படிநிலைக்கு இதைப் பயன்படுத்தலாம்.
இந்த ஆண்டு ஜமாபந்தி ஆன்லைன் மூலம் ஏன் ?
கொரோனாவால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அவர்களிடம் நேரிடையாக மனுக்களை பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது
எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை இ சேவை மையம் மூலமாகவோ அல்லது நீங்கள் ஆன்லைன் மூலம் மனு அளிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி ?👇👇👇
தமிழக அரசின் அரசாணையை பெற 👇👇👇