ஊதிய உயர்வு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மீது கடந்த ஆட்சியில் ஏராளமான வழக்குகள் தொடுக்க்பபட்டதுடன் ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். இந்த நிலையில் ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
17 B பிரிவின் கீழ் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்து, பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை கல்வித்துறை கோரியிருந்த நிலையில், தற்போது அவற்றை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.