தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது.
இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. இருப்பினும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறந்து முதலில் 10, 11, 12ஆம் வகுப்பு தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகளை திறக்கலாம் என்றும் கூறியதாக தெரியவந்துள்ளது.அதனால் ஜூலை இறுதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஆகஸ்டு தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.