ஒப்படைப்பு
வகுப்பு:10 பாடம்: தமிழ் - இயல் -1
வினாக்களுக்கான முழுமையான விடைகள்.
பகுதி - அ
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தென்னன் மகளே - இத்தொடரில் தென்னன் என்ற சொல் குறிக்கும் மன்னன் யார் ?
அ. சேரன்
ஆ. சோழன்
இ. பாண்டியன்
ஈ. பல்லவன்
விடை : இ ) பாண்டியன்
2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ. கால்டுவெல்
ஆ. மாக்ஸ்முல்லர்
இ. க. அப்பாத்துரை
ஈ. தேவநேயபாவாணர்
விடை : அ ) கால்டுவெல்
3. 'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது யாது?
அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ. பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ. ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ. வணிகக்கப்பல்களும் அணிகலன்களும்
விடை : இ ) ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்
4. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
அ. இளங்குமரன்
ஆ. வேதாசலம்
இ. விருத்தாசலம்
ஈ. துரை மாணிக்கம்
விடை : ஈ ) துரை மாணிக்கம்
5. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?
அ. பெருஞ்சித்திரனார்
ஆ. திரு.வி.க
இ. அப்பாத்துரையார்
ஈ. இளங்குமரனார்
விடை : ஈ ) இளங்குமரனார்
6. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ. கட்டை
ஆ. கொழுந்தாடை
இ. செம்மல்
ஈ. முறி
விடை : ஆ ) கொழுந்தாடை
7. நெல், புல் முதலான தானியங்களுக்கு வழங்கப்படும் சொல் என்ன?
அ. தாள்
ஆ. கூலம்
இ. சண்டு
ஈ. சருகு
விடை : அ ) தாள்
8. இரட்டுற மொழிதலின் வேறு பெயர் யாது?
ஆ. உவமை
இ. சிலேடை
அ. பிறிதுமொழிதல்
ஈ. தனிமொழி
விடை : இ ) சிலேடை
9. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
இ. ஐந்து
ஈ. ஒன்பது
ஆ. ஆறு
அ. பத்து
விடை : அ ) பத்து
10. செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயரைத் தருக.
அ. ஒற்றளபெடை
ஆ. உயிரெளபெடை
இ. இன்னிசையளடை
ஈ. சொல்லிசை அளபெடை
விடை : இசைநிறை அளபெடை
பகுதி - ஆ
II. குறுவினா
11. தமிழக்கும் கடலுக்குமான இரட்டுறமொழியும் தன்மையை குறிப்பிடுக.
தமிழ்
முத்தமிழ் - இயல் , இசை , நாடகம் ஆகிய முத்தமிழ்
முச்சங்கம் - முதல் , இடை , கடை ஆகிய முச்சங்கம்
மெத்தவணிகலன் - ஐம்பெருங்காப்பியங்கள்
சங்கத்தவர் காக்க - சங்கப்பலகையிலிருந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தமை.
கடல்
முத்தமிழ் - முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
முச்சங்கம் - மூன்று வகையான சங்குகள் தருதல்
மெத்தவணிகலன் - மிகுதியான வணிகக் கப்பல்கள்
சங்கத்தவர் காக்க - நீரலையத் தடுத்து நிறுத்திச் சங்கினைக் காத்தல்
12. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கும் வழங்கும் சொற்களைத் தருக.
பூம்பிஞ்சு - பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பிஞ்சு - இளம் காய்
வடு - மாம்பிஞ்சு
மூசு - பலாப் பிஞ்சு
கவ்வை - எள் பிஞ்சு
இளநீர் - முற்றாத தேங்காய்
கருக்கல் - இளநெல்
கச்சல் - வாழைப்பிஞ்சு
13 ) தேவநேயப் பாவாணர் குறிப்பு வரைக.
மொழிஞாயிறு என்றழைக்கப்படும் பாவாணர் பல்வேறு இலக்கண கட்டுரைகளையும் , மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர். உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
14. இணை ஒப்பு என்று கூறப்படுவது யாது?
உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு எடுத்துக்காட்டு உவமையணி என்று பெயர். எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் இணை ஒப்பு என்கிறோம்.
15. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் எனப்படும்.
எ.கா.
வினையடி விகுதி தொழிற்பெயர்
நட தல் நடத்தல்
வாழ் கை வாழ்க்கை
பகுதி - இ
III. நெடுவினா
16. அன்னை மொழியின் புகழை பெருஞ்சித்திரனார் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
அன்னை மொழியே! அழகாய் அமைந்த செழுந்தமிழே! பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே! பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே! பத்துப்பாட்டே! எட்டுத் தொகையே! பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே! பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம்
செழுமை மிக்க தமிழே! எமக்குயிரே!
சொல்லுதற்கரிய நின் பெருமைதனை
என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறு
விரித்துரைக்கும்? பழம் பெருமையும்
தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே! வியக்கத்தக்க உன் நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன.
எம் தனித்தமிழே! வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.
*************** ************* ***********
17. தமிழ் சொல்வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது கூற்றை விளக்குக..
தமிழில் உள்ள சொல்வளம் :
(i) சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ் மட்டும் அதில் தலைசிறந்ததாகும்.
(ii) “தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும் போது, தமிழிலுள்ள ஒரு பொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும்.
(iii) தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும்
சொற்களும் தமிழில் உள்ளது என்கிறார் கால்டுவெல்( திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)
(iv) தமிழ்ச் சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப்பெறும்.
அடி வகை :
ஒரு தாவரத்தின் அடிப் பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு : கீரை, வாழை முதலியவற்றின் அடி
கோல் : நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி
தூறு : குத்துச் செடி, புதர் முதலிவற்றின் அடி
தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி : கரும்பின் அடி
கழை : மூங்கிலின் அடி
அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி,
தமிழ்நாடு எத்துணைப் பொருள்வளமுடையதென்பது, அதன் விளைபொருள்வகைகளை நோக்கினாலே
விளங்கும். பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவுமிருக்க,
தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக,
கோதுமையை எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா,
ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.
நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே, பண்டைத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை
உடையவராக இருந்திருக்கின்றனர்.
திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும். பொருளைக் கூர்ந்து நோக்கி
நுண்பாகுபாடு சொற்களும் நுண்பொருட் சொற்களும் அமைத்துக் கொள்ள வேண்டும். அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட புதிய சொற்களுக்கான கலைச்சொல் வளத்தையும் பெருக்க வேண்டும்.
If you want to download pdf Click Below