9ஆம் வகுப்பு தமிழ் - இயல் 1 ஒப்படைப்பு விடைகள் 9th Class Tamil - Lesson 1 Assignment Answers - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, August 13, 2021

9ஆம் வகுப்பு தமிழ் - இயல் 1 ஒப்படைப்பு விடைகள் 9th Class Tamil - Lesson 1 Assignment Answers

 ஒப்படைப்பு


             வகுப்பு : 9 பாடம்: தமிழ்


                                இயல்-1


                               பகுதி - அ


I . ஒரு சொல்லில் விடை தருக.


1. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது? 


           மொரிசியஸ், இலங்கை


2. கடுவன் என்னும் சொல்லின் பொருள் யாது? 


                            ஆண்குரங்கு


3. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்? 


                         கால்டுவல்


4. தமிழோவியம் என்னும் கவிதை நூல் யாருடைய படைப்பு? 


                ஈரோடு தமிழன்பன்


5. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் யார்?


                      பாரதியார்


6. சிற்றியலக்கியங்கள் எத்தனை வகைப்படும்? 


                       96


7. கண்ணி என்னும் செய்யுள் எத்தனை அடிகளைக் கொண்டது? 


                  இரண்டு அடிகள்


8. தூது இலக்கியத்தின் வேறு பெயர் என்ன?


    வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்


9. வனப்பு என்பதன் பொருள் யாது? 


                          அழகு


10. " விட்டு விட்டு " - இலக்கணக் குறிப்பு தருக. 


                அடுக்குத்தொடர்


                            பகுதி - ஆ


II. சிறுவினா


11. இந்திய மொழிக் குடும்பங்கள் நான்கினை எழுதுக.


       1 ) இந்தோ - ஆசிய மொழிகள்


       2 ) திராவிட மொழிகள்


       3 ) ஆஸ்திரோ ஆசிய மொழிகள்


       4 ) சீன - திபெத்திய மொழிகள்


12. தமிழோவியம் என்னும் நூலின் ஆசிரியர் எழுதியுள்ள கவிதை நூல்களை எழுதுக.


             1 ) வணக்கம் வள்ளுவ


              2 ) தமிழன்பன் கவிதைகள்


13. சங்க இலக்கியத்தில் இயக்கப்பட்ட கடற்கலன்கள் எவையெவை?


            1 ) நாவாய் 


           2 ) வங்கம் 


           3 ) தோணி 


           4 ) கலம்


14. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் நான்கு தமிழ்ச் சொற்களைத் தருக.


            1 ) மென்பொருள்

            2 ) உலவி

            3 ) செதுக்கி

            4 ) சுட்டி


15. தன்வினையைப் பிறவினையாக மாற்றும் விகுதிகளை எழுதுக.


      வி , பி 



                                 பகுதி - இ


III. பெருவினா


16. திராவிட மொழிக்குடும்பம் பற்றி விளக்குக.


திராவிட மொழிக்குடும்பம்


 திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட . மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள தமிழ், கன்னடம், மலையாளம் முதலானவை தென்திராவிட மொழிகள் எனவும் தெலுங்கு முதலான சில மொழிகள் நடுத்திராவிட மொழிகள் எனவும் பிராகுயி முதலானவை வடதிராவிட மொழிகள் எனவும் பகுக்கப்பட்டுள்ளன.



தென்திராவிடம்


தமிழ்


மலையாளம்


கன்னடம்


குடகு (கொடகு)


துளு


கோத்தா


தோடா


கொரகா


இருளா



நடுத்திராவிடம்




தெலுங்கு


கூயி


கூவி (குவி)


கோண்டா


கோலாமி (கொலாமி)


நாய்க்கி


பெங்கோ


மண்டா


பர்ஜி


கதபா


கோண்டி


கோயா


வடதிராவிடம்


குரூக்


மால்தோ


பிராகுய் (பிராகுயி)



                     மேலுள்ள பட்டியலில்.உள்ள 24 மொழிகள் தவிர அண்மையில் கண்டறியப்பட்ட எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.


திராவிடமொழிகளின் பொதுப்பண்புகள்


                சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல், அடிச்சொல் எனப்படும். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.




சான்று


அடிச்சொல் திராவிட மொழிகள்


கண் - தமிழ்


கண்ணு - மலையாளம், கன்னடம்


கன்னு - தெலுங்கு, குடகு


ஃகன் - குரூக்


கெண் - பர்ஜி


கொண் - தோடா


                   திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன. 


மூன்று - தமிழ்


மூணு - மலையாளம்


மூடு - தெலுங்கு


மூரு - கன்னடம்


மூஜி - துளு 


குறில், நெடில் வேறுபாடு


                         திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகளில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன.


அடி – குறில்


ஆடி - நெடில்


வளி - குறில்


வாளி - நெடில்


பால்பாகுபாடு



               திராவிட மொழிகளில் பொருள்களின்

தன்மையை ஒட்டிப் பால் பாகுபாடு

அமைந்துள்ளது. ஆனால், வடமொழியில்

இவ்வாறு அமையவில்லை. உயிரற்ற

பொருள்களும் கண்ணுக்கே புலப்படாத

நுண்பொருள்களும் கூட ஆண், பெண்

பாகுபடுத்தப்படுகின்றன .


        இம்மொழியில் கைவிரல்கள் பெண்பால்

என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும்

வேறுபடுத்தப்படுகின்றன. ஜெர்மன்

மொழியிலும் இத்தகைய தன்மையைக்

காணமுடிகிறது. முகத்தின் பகுதிகளான

வாய், மூக்கு, கண் ஆகியவை வேறுவேறு

பால்களாகச் சுட்டப்படுகின்றன. வாய்-

ஆண்பால், மூக்கு பெண்பால், கண்

பொதுப்பால் எனப் பகுக்கும் நிலை உள்ளது.


                      திராவிட மொழிகளில் ஆண்பால்,

பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை

ஒருமையில் காணப்படுகிறது. அஃறிணைப்

பொருள்களையும் ஆண், பெண் என்று பால்

அடிப்படையில் பகுத்தாலும் அவற்றிற்கெனப்

பால்காட்டும் விகுதிகள் இல்லை.

தனிச்சொற்களாலேயே ஆண், பெண் என்ற பகுப்பை உணர்த்தினர். (எ.கா. கடுவன் - மந்தி; களிறு - பிடி)

வினைச்சொற்கள்


                     ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டு:


வந்தான் உயர்திணை ஆண்பால் , படர்க்கை ஒருமை


     இவ்வியல்புக்கு மாறாக மலையாள மொழி மட்டுமே அமைந்துள்ளது. அம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பால் காட்டும் விகுதிகள் இல்லை. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு திராவிட மொழிகள் சில பொதுப்பண்புகளைப் பெற்றிருந்தாலும் அவற்றுள் தமிழுக்கென்று சில சிறப்புக் கூறுகளும் தனித்தன்மைகளும் உள்ளன.


************** ************** ************


17. தமிழ் விடுதூது பாடலில் கூறும் தமிழின் பத்துக் குணங்களை எழுதுக.


      1 ) செறிவு 

    

      2 ) தெளிவு 


      3 ) சமநிலை 


      4 ) இன்பம் 


      5 ) ஒழுகிசை 


      6 ) உதாரம் 


      7 ) உய்த்தலில் பொருண்மை 


      8 ) காந்தம் 


      9 ) வலி 


      10 ) சமாதி



If you want to download pdf Click Below




Dear WhatsApp Admins Add  9342934162 to receive Education Murasu Kalvi news regularly