அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, December 24, 2021

அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை

 




தென்காசி CEO சுற்றறிக்கை 

23.12.2021 அன்று பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற திருநெல்வேலி மண்டல ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி , தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிற 25.12.2021 முதல் 02.01.2022 வரை அளிக்கப்படுகிறது என்ற விவரம் அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அவர்களின் செயல்முறைகள்.