ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதால் 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்) மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வகுப்புகள் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும்.
- முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
டிச.31 மற்றும் ஜன.1ஆம் தேதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு :
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு
டிச.31 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை
அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும் - தமிழக அரசு
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜனவரி 3 முதல் இயல்பு நடைமுறைப்படி செயல்படும்
6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும் சுழற்சி முறை இல்லை
அனைத்து கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகள் வழக்கமான நடைமுறைப்படி செயல்படும்
அனைத்து கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகளிலும் சுழற்சி முறை ரத்து
அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதி
ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்
சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகளுக்கு தடை தொடரும்
முதல்வரின் அறிக்கை
👇👇👇