இல்லம் தேடி ஆசிரியர் வேலை வாய்ப்பு..!
*+2 மற்றும் டிகிரி படித்த அனைவருக்கும் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!*
*"தமிழக அரசின் புதிய திட்டம் - இல்லம் தேடிக் கல்வி திட்டம்"*
*வீட்டிலிருந்தபடியே தன்னார்வலராக பணிபுரியலாம்*
*நேரம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை..!*
*உங்கள் வீடுதான் பள்ளி..!*
*உங்கள் பகுதியிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வகுப்பு 1 முதல் வகுப்பு 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்..!*
*1)பதவி தன்னார்வலரே..!*
*2)சம்பளம் கிடையாது..!*
*3) ஊக்கத்தொகையாக ரூ.1000/- வழங்கப்படும்..!*
*5) மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசால் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டப்படுவீர்கள்..!*
*6)இந்த நற்சான்று வைத்திருப்பவர்களுக்கு, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசு வேலை வாய்ப்புகள் அமையும் தருணத்தில் கிரேஸ் மார்க் வழங்கி முன்னுரிமையும் வழங்கப்படலாம்..!*
*இந்த வேலையில் சேர இடைத்தரகர்கள் இல்லை..!*
*நீங்களே, இன்றே இப்போதே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!*
*அல்லது உங்கள் பகுதி பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்..!*
இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக, படிவம் இவ்விணைய தளத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
தன்னார்வலர்கள்..
வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்
Click Below Link
https://illamthedikalvi.tnschools.gov.in/volunteer_registration