9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம்
இந்த திட்டத்தின்படி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வை எழுதவேண்டும்.
இந்த தேர்வு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும், இந்த தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.01.2022 முதல் 27.01.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022.
NMMS APPLICATION- TAMIL & ENGLISH Download Link
👇👇👇
NMMS தேர்வுக்கான தேதி மற்றும் முழுமையான தகவல்கள்