1 - 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை திட்டம்
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடுநிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆல்-பாஸ் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.