10,12ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு
தமிழகத்தில் தற்போதுவரை ஒட்டு மொத்தமாக 80,000 இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, கூடுதலாக 1,70,000 மையங்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று திருவல்லிக்கேணியில் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்துவைத்திருந்தார். அதன்பின்னர் பத்திரிகையாளர் மத்தியில் பேசிய அவர், “தற்போது 15 முதல் 18 வயது உள்ளோருக்கு தடுப்பூசி என்பது மிகவும் முக்கியம். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், இந்த கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும்” என்றார்.