தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு.. ஊக்கத் தொகை பெறுவது எப்படி?.. இதோ முழு விபரம்..!!!! - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, January 5, 2022

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு.. ஊக்கத் தொகை பெறுவது எப்படி?.. இதோ முழு விபரம்..!!!!

 தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.




அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இதையடுத்து மாணவர்களின் நீண்டநாள் படிப்பின் இழப்பை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்மூலம் அனைத்து குழந்தைகளும் தன்னார்வலர்கள் உதவியால் கல்வி கற்று வந்தனர்.


டிசம்பர் மாதம் முதல் குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு தன்னார்வலர்கள் வகுப்புகள் நடத்தியிருந்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகையை வாங்க விரும்பும் தன்னார்வலர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை மொபைல் மூலமாக இல்லம் தேடி கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


மேலும் வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கி கணக்கு தொடங்கியதன் பின், பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான ஆப்ஷன் நாளை முதல் இந்த செயலியில் ஆக்டிவேட் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. இதில் தன்னார்வலர்கள் பெயர் வங்கி கணக்கு எண் ஐஎஃப்எஸ்சிகோட் ஆகியவையுடன் வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தை புகைப்படமெடுத்து இல்லம் தேடி கல்வியை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு வழங்குவதன் மூலமாக தன்னார்வலர்கள் இன்னும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.