Transfer Application uploading option in EMIS Now Available
மாறுதல் விண்ணப்பம் EMIS மூலம் தற்போது பதிவு செய்யலாம்.
Teacher individual iogin மூலம் சென்று மாறுதல் படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்பலாம்.
மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை விண்ணப்பதாரரே EMIS இல் சென்று பதிவு செய்யவேண்டும்.
எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து இங்கே காண்போம்.
Step - 1
கீழ்க்காணும் EMIS இல் Individual கணக்கில் Login செய்து உள்ளே செல்லவும்
👇👇👇
. அதில் My Profile click செய்து Teacher Transfer என்பதை click செய்யவும்.
Step - 2
கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவை சான்றிதழ்களை Upload செய்யவேண்டும்.
- மாறுதல் கோரும் வகை
- ஆசிரியரின் அடையாள எண்
- ஆசிரியர் பெயர்
- பாலினம்
- கைப்பேசி எண்
- தற்போது பணிபுரியும் பள்ளியின் UDISE எண்
- தற்போது பணிபுரியும் பதவி
உள்ளிட்ட கேட்கப்பட்ட தகவலினை பதிவு செய்ய வேண்டும்.
Step - 3
பின்னர் Submit Button click செய்யவும்.
குறிப்பு
இங்கு
User ID
என்பது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7 இலக்க எண் ஆகும் . 10 என ஆரம்பிக்கும்.
கடவுச்சொல்
உங்களின் மொபைல் எண்ணில் முதல் 4 இலக்கம் உடன் @ மற்றும் பிறந்த நாளின் வருடத்தின் 4 இலக்க எண் ஆகும்