11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேரம் குறைப்பு. - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, April 23, 2022

11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேரம் குறைப்பு.

 தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் 28-ம் தேதி வரையும் ஏப்ரல் 28 முதல் மே 2-ம் தேதி வரை இரு கட்டமாக செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டுகளில் உயிரியல், வேதியல், இயற்பியல் உள்ளிட்ட முதன்மை தேர்வுகளுக்கு செய்முறை தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது.

இந்த கல்வியாண்டில் செய்முறை தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைத்து அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. இந்த செய்முறை தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை பங்கேற்பார்கள். 10 மதிப்பெண்கள் அகமதீப்பீடு வழங்கப்படுகின்றன. எனவே 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வு என்பதால் அதனை 2 மணி நேரமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.



கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது என்பது குறிப்பிடதக்கது.