கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் குறித்த அறிவிக்கை!!! - தமிழக அரசு வெளியீடு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, October 4, 2022

கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் குறித்த அறிவிக்கை!!! - தமிழக அரசு வெளியீடு

கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் குறித்த அறிவிக்கை!!! - தமிழக அரசு வெளியீடு

 






தமிழகத்தில் காலியாக உள்ள 2, 748 கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் எழுதிய கடிதத்தில், 'மாநிலத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் 2, 748 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.


அதிகப்படியான காலியிடங்கள் இருப்பதால், அவற்றை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எடுக்க வேண்டும். குறிப்பாக கிராம உதவியாளா்கள் தோவுக்கான முழுமையான நடவடிக்கைகளில் எந்தவித வீதிமீறலும் நடைபெறாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக வட்டாட்சியா் அளவில் அக்டோபா் 10-ஆம் தேதியன்று விளம்பரம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் அளிக்க இறுதி நாள் நவம்பா் 7-ஆம் தேதி எனவும், விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான இறுதிநாள் நவம்பா் 14-ஆம் தேதியாகவும் நிா்ணயிக்க வேண்டும். விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் திறன் தோவு நவம்பா் 30-ஆம் தேதியும், நோகாணல் டிசம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடத்தப்பட வேண்டும். தோவு செய்யப்பட்டவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன உத்தரவுகளை வரும் டிசம்பா் 19-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.


இதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட வருவாய்த்துறை அரசாணையை பின்பற்றப்பட வேண்டும். மேலும், கிராம உதவியாளா் பணிக்கு தோவு செய்வதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் அதிகாரி ஒருவா் வட்டம் வாரியாக நியமிக்கப்பட வேண்டும்.


  கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் குறித்த அறிவிக்கை!!! Download PDF 


👇👇👇


Click Here to Direct Link



If you want more information about Study Materials and Educational Related News Please Connect with Us and Support With Us 
Thank You 



Dear WhatsApp Admins Add  9342934162 to receive Education Murasu Kalvi news regularly