6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கு நாளை (13.12.2022) முதல் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( HI-TECH LAB) மூலம் வினாடி வினா - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!!!
பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் SCERT இயக்குநரின் இணை செயல்முறைகள்.
தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மதிப்பீட்டு புலம் - பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிசார் மதிப்பீட்டை (School Based Assessment) முதன்மைப்படுத்தும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (HiTech Lab) வழியாக கணினி வழி வினாடிவினா போட்டிகளை மேற்கொள்ளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு:
மாணவர்களுக்கு கணினி வழி வினாடிவினா போட்டிகளை 13.12.2022 முதல் 16.12.2022 வரை
நடத்த வேண்டும் என்று பார்வையில் காணும் கூட்டக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் நவம்பர்-டிசம்பர் மாதப் பாடப்பொருளை அடிப்படையாககி கொண்டு தமிழ், ஆங்கிலம், கணக்கு அறிவியல்; சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்குத் தனித்தனியே கணினி வழி வினாடிவினா போட்டிகளை 13.12.2022 முதல் 16:12.2022 வரை நடத்த வேண்டும் என்று தொடர்புடைய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கணினி வழி வினாடிவினா போட்டிகளுக்கான கால அட்டவணையை
தொடர்புடைய பள்ளிகளே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்பதையும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உரிய பாடங்களுக்கான பலவுள் தெரிவு வினாக்களில் இருந்து தேவைப்படும் வினாக்களைத் தொடர்புடைய ஆசிரியர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என்பதையும் தொடர்புடைய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்குத் தேவைப்படும் உயர்தொழில்நுட்ப ஆய்வக நிகழ்வையும் வினாத்தாளையும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள YouTube காணொலிகளைப் பயன்படுத்தி அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களே வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதையும் தொடர்புடைய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் SCERT இயக்குநரின் இணை செயல்முறைகள்
👇👇👇
asiriyarseithitvm.blogspot.com வலைத்தளத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் மற்றும் All Classes Study Materials வெளியிட்டு வருகிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
If you want more information about Study Materials and Educational Related News Please Connect with Us and Support With Us
Thank You
Dear WhatsApp Admins Add 9342934162 to receive Education Murasu Kalvi news regularly
Join Whatsapp Group - Click Here