TET உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என TRB அறிவிப்பு!!!
ஆசிரியர் தேர்வு வாரியம்,
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கட்டடம், டி.பி.ஐ வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600006.
ஆசிரியர் தகுதித் தேர்வு- 2012 சார்ந்த தேர்வர்களின் விவரங்கள் அனைத்தும் தேர்வெழுதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பார்வை - 1 & 2 ல் காணும் இவ்வாரிய கடிதங்கள் வாயிலாக சான்றிதழ்கள் உண்மைத் தன்மைக் கோரப்படும் கருத்துருக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள தேர்வர்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து சான்றிதழ் உண்மைத் தன்மை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அனைத்து மாவட்டங்களிருந்து சான்றிதழ்கள் உண்மைத் தன்மைக் கோரி கருத்துருக்கள் இவ்வாரியத்தில் பெறப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு-2012 சார்ந்த தேர்வர்களின் விவரங்கள் PDF வடிவில் மீண்டும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இவ்வாரிய மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுகிறது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு - 2012, 2013, 2017, மற்றும் 2019 ஆகிய தேர்வுகளுக்கான சான்றிதழ் திருத்தங்கள். உண்மைத் தன்மை அனைத்தும் தேர்வெழுதிய மாவட்ட அலுவலகங்களிலே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது.
மேற்காண் பொருள் சார்பான கருத்துருக்கள் இவ்வாரியத்திற்கு அனுப்ப கூடாது என்ற அறிவுரையினை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர். வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
TRB Direction For TET Genuineness Certificate - PDF
👇👇👇