Term 2 - Summative Assessment ( 13.12.22 - 23.12.22 ) வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, December 9, 2022

Term 2 - Summative Assessment ( 13.12.22 - 23.12.22 ) வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 Term 2 - Summative Assessment ( 13.12.22 - 23.12.22 ) வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.




1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 13.12.22 முதல் 23.12.22 வரை முதல் பருவத்தில் நடத்தப்பட்டது போலவே நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தொகுத்தறி மதிப்பீடு எழுத்துப்பூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் PDF வடிவிலான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாட்கள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம்) ஆசிரியர்களின் எண்ணும் எழுத்தும் செயலியிலேயே பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்படும்.

செயலி வாயிலாக மாணவர்களுக்கு மதிப்பீடு முடித்தப்பிறகு கடைசி மூன்று தினங்களான 21, 22 மற்றும் 23.12.2022 தேதிகளில் முறையே தமிழ், ஆங்கிலம் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திக்கொள்ளலாம்.

இந்த PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாவினை தவிர ஆசிரியர் விரும்பும் வகையில் தொகுத்தறி வினாத்தாளை வடிவமைத்து அதன் அடிப்படையிலும் மதிப்பீடு செய்து கொள்ளலாம். 

விளைவுகளை விருப்பத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு நடத்தப்படும் எழுத்துப்பூர்வமான மதிப்பீடு முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது (Only Optional) மட்டுமே. இம்மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்யத்தேவையில்லை.






( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )





  ஒன்று முதல் மூன்று வகுப்பு மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு ஆன்லைன் மற்றும் எழுத்து தேர்வு மூலமாகவும் நடைபெறும் என்பதற்கான ஆணை -  PDF 


👇👇👇


Click Here to Download