பார்வை 1 இல் கண்டுள்ள அரசாணையில் பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளவும். மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்கும் பொருட்டும் பள்ளிக் கல்வி துறையில் உள்ள நிர்வாகத்தினை சீரமைத்து ஆணை வழங்கப்பட்டது.
மேலும், அவ்வரசாணையில் நிர்வாக சீரமைப்பின் காரணமாக முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் ஆணை வழங்கப்பட்டது.
பார்வை 1 இல் கண்டுள்ள அரசாணையில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி/ அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சேமநலநிதி முன்பணம் மற்றும் பகுதி இறுதி முன்பணம் தொகை ஆகியவை பெற்று வழங்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த நடைமுறையின்படியே வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மாநகராட்சி / அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சேமநலநிதி முன்பணம் மற்றும் பகுதி இறுதி முன்பணம் தொகை ஆகியவை. பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பார்வை 1 இல் கண்டுள்ள அரசாணையில் வழங்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை மேற்கொள்ளமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி) மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
DEE - Duties and Responsiblities of DEO and BEO - அரசாணை PDF
👇👇👇