நாளை புது வருஷம் துவங்க இருக்கிறது. தமிழகம் முழுவதுமே புதுவருட கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. மார்கழி மாதத்தின் துவக்கத்தில் இருந்தே திருச்சி மாவட்டம் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பியிருக்கிறது.
உலக புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். பகல் பத்து, இரா பத்து நிகழ்வுகளில், விழாவின் உச்சக்கட்டமான சொர்க்க வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசியும் ஜனவரி 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 2ம் தேதி திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை அறிவித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பிற மாவட்டங்களில், மாநிலங்கள் என்றில்லாமல் உலகம் முழுவதும் இருந்தும், பக்தர்கள் ஸ்ரீ ரெங்கநாதரை தரிசிக்க மார்கழி மாதத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருகிறார்கள். வைணவ தலங்களில் முதன்மையானதும், மிக முக்கியமானதும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம். இந்நிலையில், ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசிக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.
அன்றைய தினம் பக்தர்களின் வசதிக்காகவும், உள்ளூர்வாசிகள் திருவிழாவைக் கொண்டாடும் வகையிலும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் 'வைகுண்ட ஏகாதசி' விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முழுவதும் ஜனவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.