மதுரையில் எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் சாதாரணமாக படிக்கும் (ஸ்லோ லேனர்ஸ்) மாண வர்கள் எண்ணிக்கை 45 சதவீதம் குறைக்கப்பட் டுள்ளது.
அரசு, உதவிபெறும் பள் ளிகளில் கொரோனா தாக் கத்தால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க 1-3ம் வகுப்பு மாணவர்க ளுக்கு இத்திட்டம் நடை முறையில் உள்ளது. தமிழ், ஆங்கிலம் பிழையின்றி எழுத, படிப்பதை உறுதி செய்தல், அடிப்படை திறனை மேம்படுத்துதல் இத்திட்டத்தின் நோக்கம். இதன்படி மாவட்டத்தில் இரண்டு, மூன்றாம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட மதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியி டப்பட்டுள்ளன.
இரண்டாம் வகுப்பு தமிழில், சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 48 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆங்கிலத்தில் 67ல் இருந்து 19 சதவீதமாகவும், கணிதத்தில் 72ல் இருந்து 54 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மூன்றாம் வகுப்பு தமிழில் 37 சதவீதத்தில் இருந்து 24ஆகவும், ஆங்கிலத்தில் 60ல் இருந்து 25 சதவீதமாகவும், கணிதத்தில் 55ல் இருந்து 47 சதவீ தமாகவும் குறைந்துள்ளது.
சி.இ.ஒ., கார்த்திகா கூறி யதாவது: இத்திட்டத்தில் சாதாரணமாக (அரும்பு),மீடியமாக (மொட்டு), நன்றாக (மலர்) படிக்கும் மாணவர் என மூன்று வகை யாக பிரித்து, அவர்கள் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கற்பித்தனர். இவர்களுக்கு நடந்த இரண்டாம் கட்ட பருவத் தேர்வு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் மாவட்ட அளவில் சாதாரணமாக (மெல்ல கற்கும்)படிக்கும் மாணவர் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 45 சத 43 வீதம் குறைந்து அவர்கள் 'மொட்டு' நிலைக்கு முன்னேறியுள்ளனர்.இதற்காக உழைத்த ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்தாண்டு 4,5ம் வகுப் புக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும், என்றார்.