1. ‘அன்னை மொழியே’ என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
2. பெருஞ்சித்திரனார் எங்கு, எப்போது பிறந்தார்?
சேலம் மாவட்டம் சமுத்திரத்தில் 10.03.1933இல் பிறந்தார்.
3. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
துரை. மாணிக்கம்
4. பெருஞ்சித்திரனாரின் சிறப்புப்பெயர் என்ன?
பாவலரேறு
5. பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?
o உலகியல் நூறு
o பாவியக்கொத்து
o நூறாசிரியம்
o கனிச்சாறு
o எண்சுவை எண்பது
o மகபுக வஞ்சி
o பள்ளிப் பறவைகள்
6. ‘அன்னை மொழியே’ என்ற பெருஞ்சித்திரனாரின் பாடல் இடம்பெற்ற நூல் எது?
கனிச்சாறு
7. தென்மொழி, தமிழ்ச்சிட்டு என்ற இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்?
துரை. மாணிக்கம் (பெருஞ்சித்திரனார்)
8. யாரைத் ‘தென்னன் மகளே’ எனப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகிறார்.
தமிழை
9. ‘இன்னறும் பாப்பத்தே’ எனப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவது?
பத்துப்பாட்டு
10. எண்தொகையே, நற்கணக்கே எனப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவது?
எண்தொகை – எட்டுத்தொகை
நற்கணக்கே – பதினெண் கீழ்க்கணக்கு
11. ‘நறுங்கனி’ எனப் பாவலரேறு குறிப்பிடுவது?
தமிழ்மொழி
12. “தென்னன் மகளே திருக்குறளின் மாண்புகழே
இன்னறும் பாப்பத்தே எண்தொகையே நற்கணக்கே
மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே” என்ற பாடலடிகள் குறிப்பிடும் நூல்கள்?
o திருக்குறளின் மாண்புகழே - திருக்குறள்
o இன்னறும் பாப்பத்தே - பத்துப்பாட்டு
o எண்தொகையே - எட்டுத்தொகை
o நற்கணக்கே - பதினெண் கீழ்க்கணக்கு
o மன்னுஞ் சிலம்பே - சிலப்பதிகாரம்
o மணிமே கலைவடிவே” - மணிமேகலை
13. பெருஞ்சித்திரனாரின் பெற்றோர்?
துரைசாமி – குஞ்சம்மாள்
14. ‘தும்பி’ என்பதன் பொருள்.
வண்டு
15. தமிழ் எக்கண்டத்தில் அரசாண்டது?
குமரிக்கண்டம்
16. பாவலரேறுவின் எந்த நூல் தமிழக்குக் கருவூலமாக அமைந்தது?
திருக்குறள் மெய்ப்பொருளுரை
17. பாண்டிய மன்னனின் மகள் யார்?
தமிழ்
18. பெருஞ்சித்திரனார் கூறும் ‘கடல்கொண்ட நாடு’ எது?
குமரிக்கண்டம்
19. தென்னன் என்ற சொல் யாரைக் குறிப்பிடுகிறது?
பாண்டியனை
20. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்,
என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் - எனக் கூறியவர் க. சச்சிதானந்தன்
21. பொருள் தருக.
o தென்னன் - பாண்டியன்
o கனி - பழம்
o எண்தொகை - எட்டுத்தொகை
o தும்பி - வண்டு
o முந்துற்றோம் - முழங்குகின்றோம்
o மாண்பு - பெருமை
22. பிரித்து எழுதுக
o செந்தமிழ் - செம்மை+தமிழ்
o நற்கணக்கே - நன்மை + கணக்கே
o மண்ணுலகம் - மண் + உலகம்
o புகழுரை - புகழ் + உரை
o உணர்வெழுப்ப - உணர்வு + எழுப்ப
o பற்றுணர்வு - பற்று + உணர்வு
o அழகார்ந்த - அழகு + ஆர்ந்த
o நாட்டிடை - நாடு + இடை
o பேரரசு - பெருமை + அரசு
o உள்ளுயிரே - உள் + உயிரே
23. எதிச்சொல் தருக
o பழமை - புதுமை
o பெருமை - சிறுமை
o புகழ் - இகழ்
24. இலக்கணக் குறிப்பு தருக.
o நறுங்கனி - பண்புத்தொகை
o எழுப்ப - பெயரெச்சம்
o சிறகார்ந்த - பெயரெச்சம்
o செந்தமிழ் - பண்புத்தொகை
o செந்தாமரை - பண்புத்தொகை
o முந்துற்றோம் - தன்மைப்பன்மை வினைமுற்று
o குடித்து - வினையெச்சம்
o கன்னிக்குமரி - உருவகம்
o மன்னுலகம் - உருவகம்
o தென்னன் மகள் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
o வாழ்த்துவோம் - தன்மைப் பன்மை வினைமுற்று
o முகிழ்ந்த - பெயரெச்சம்
o நறுங்கனி - பண்புத்தொகை
o பேரரசு - பண்புத்தொகை
o யாண்டும் - முற்றும்மை
o நின் பெருமை - ஆறாம் வேற்றுமைத் தொகை
1. ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.
அ) யசோதர காவியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) சீவக சிந்தாமணி
2. உள்ளத்தில் கனல்மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?
அ) தேன்சிட்டு
ஆ) வண்டு
இ) தேனீ
ஈ) வண்ணத்துப்பூச்சி
3. “அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
4. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) பாவியக்கொத்து
ஆ) நூறாசிரியம்
இ) தென்தமிழ்
ஈ) பள்ளிப்பறவைகள்
5. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தமிழ்ச்சிட்டு
ஆ) பள்ளிப்பறவைகள்
இ) எண்சுவை எண்பது
ஈ) உலகியல் நூறு
6. பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
இ) 1.ஆ 2.இ 3.ஈ. 4.அ
ஈ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
7. ‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்
அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) பாவியக்கொத்து
8. “முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) க.சச்சிதானந்தன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
9. “முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்
அ) க.சச்சிதானந்தன்
ஆ) துரை. மாணிக்கம்
இ) வாணிதாசன்
ஈ) முடியரசன்
10. “நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
அ) 18
ஆ) 10
இ) 8
ஈ) 5
11. “மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!” எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) எட்டு
12. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்.
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெரியவன்கவிராயர்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) தமிழண்ணல்
13. பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்.
அ) முன்னை முகிழ்ந்த
ஆ) முன்னைக்கும் முன்னை
இ) முன்னும் நினைவால்
ஈ) முந்துற்றோம் யாண்டும்
14. ‘பாப்பத்தே எண் தொகையே’ – சரியான பொருளைக் கண்டறி.
அ) பாடல் பத்து, எண் தொகை
ஆ) பா பத்து, எட்டுத் தொகை
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
ஈ) பத்தும் எட்டும்
15. ‘முந்துற்றோம் யாண்டும்’, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ எத்தொகுப்பில் எடுத்தாளப் பெற்றன?
அ) எண்சுவை எண்பது
ஆ) உலகியல் நூறு
இ) நூறாசிரியம்
ஈ) கனிச்சாறு
16. செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அது போல – பயின்று வரும் அணி
அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) தற்குறிப்பேற்றணி
17. செந்தமிழ் – பிரித்து எழுதுக.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) செ + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
18. செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) அன்மொழித்தொகை
19. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
20. தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பாரதியார்
இ)சச்சிதானந்தன்
ஈ) சுரதா
21. ‘அன்னை மொழியே’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர்
அ) சுந்தரனார்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) பாவாணர்
22. “சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர்.
அ) பாரதிதாசன்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) சச்சிதானந்தன்
ஈ) ஆறுமுகநாவலர்
23. பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல்.
அ) பாவியக்கொத்து
ஆ) கனிச்சாறு
இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
ஈ) உலகியல் நூறு
24. தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர்.
அ) கண்ண தாசன்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) திரு.வி.க
25. துரை மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பாரதியார்
இ) பாரதிதாசன்
ஈ)சுரதா
26. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல.
அ) உலகியல் நூறு
ஆ) பாவியக்கொத்து
இ) மாங்கனி
ஈ) மகபுகுவஞ்சி
27. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல.
அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) குருஞ்சிதிட்டு
28. தென்மொழி, தமிழ்சிட்டுஆகிய இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர்.
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆ)க.சச்சிதானந்தன்
இ) பாரதியார்
ஈ) நப்பூதனார்
29. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந்+தமிழ்+நா
ஆ) எந்த+தமிழ்+நா
இ) எம்+தமிழ்+நா
ஈ) எந்தம்+தமிழ்+நா
30 ’நல்ல’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
31. ’ஓங்கு’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்.
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
32. ’ஒத்த’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
33. திணையினைத் தன்பெயரில் கொண்ட எட்டுத்தொகை நூல்
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
34. குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களின் அடைமொழிகள்.
அ) நல்ல, ஒத்த, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்
ஆ) ஒத்த, நல்ல, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்
இ) ஓங்கு, நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்
ஈ) நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்,ஓங்க
35. தென்னன் மகள் - இலக்கணக்குறிப்பு தருக.
அ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
ஆ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
இ) நான்காம் வேற்றுமைத் தொகை
ஈ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
More Study Materials 👉👉👉Click Here