Tamil Eligibility Test Study Materials - 02 - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Thursday, August 14, 2025

Tamil Eligibility Test Study Materials - 02





 “நாடும் மொழியும் நமது இருகண்கள்” என்றவர் = பாரதியார்.

“திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” என்ற நூலை எழுதியவர் = கால்டுவெல்.


தாவரத்தின் அடிப்பகுதியை குறிக்கும் சொற்கள்


v    தாள்        = நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடிப் பகுதி

v    தண்டு    = கீரை,வாழை முதலியவற்றின் அடிப் பகுதி

v    கோல்     = நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடிப் பகுதி

v    தூறு        = குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடிப் பகுதி

v    தட்டு அல்லது தட்டை= கம்பு, சோளம் முதலியவற்றின் அடிப் பகுதி

v    கழி          = கரும்பின் அடிப் பகுதி

v    கழை      = மூங்கிலின் அடிப் பகுதி

v    அடி         = புளி, வேம்பு முதலியவற்றின் அடிப் பகுதி


தாவரங்களின் கிளைப்பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள்


v    கவை     = அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை

v    கொம்பு (அ) கொப்பு  = கவையின் பிரிவு

v    கிளை    = கொம்பின் பிரிவு

v    சினை   = கிளையின் பிரிவு

v    போத்து = சினையின் பிரிவு

v    குச்சு      = போத்தின் பிரிவு

v    இணுக்கு = குச்சியின் பிரிவு


காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள்


v    சுள்ளி    = காய்ந்த குச்சு (குச்சி)

v    விறகு     = காய்ந்த சிறுகிளை

v    வெங்கழி     = காய்ந்த கழி

v    கட்டை    = காய்ந்த கொம்பும் கவையும் அடியும்


தாவரங்களின் இலை வகைகளை குறிக்கும் சொற்கள்


v    இலை   = புளி, வேம்பு முதலியவற்றின் இலை

v    தாள்      = நெல்,புல் முதலியவற்றின் இலை

v    தோகை  = சோளம், கரும்பு முதலியவற்றின் இலை

v    ஓலை       = தென்னை , பனை முதலியவற்றின் இலை

v    சண்டு = காய்ந்த தாளும் தோகையும்

v    சருகு      = காய்ந்த இலை


தாவரத்தின் நுனிப்பகுதிகளை குறிக்கும் சொற்கள்


v   துளிர் அல்லது தளிர்   = நெல், புல் முதலியவற்றின் நுனி

v   முறி அல்லது கொழுந்து  = புளி, வேம்பு முதலியவற்றின் நுனி

v  குருத்து  =சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் நுனி

v  கொழுந்தாடை  = கரும்பின் நுனிப்பகுதி


பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்


v    அரும்பு     = பூவின் தோற்றநிலை

v    போது    = பூ விரியத் தொடங்கும் நிலை

v    மலர் (அலர்)    = பூவின் மலர்ந்த நிலை

v    வீ       = மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை

v    செம்மல்      = பூ வாடின நிலை


தாவரத்தின் பிஞ்சு வகைகளை குறிக்கும் சொற்கள்


v    பூம்பிஞ்சு      = பூவோடு கூடிய இளம்பிஞ்சு

v    பிஞ்சு      = இளம் காய்

v    வடு       = மாம்பிஞ்சு

v    மூசு     = பலாப்பிஞ்சு

v    கவ்வை    = எள்பிஞ்சு

v    குரும்பை    = தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு

v    முட்டுக் குரும்பை    = சிறு குரும்பை

v    இளநீர்    = முற்றாத தேங்காய்

v    நுழாய்    = இளம்பாக்கு

v    கருக்கல்      = இளநெல்

v    கச்சல்       = வாழைப்பிஞ்சு


தாவரங்களின் குலை வகைகளை குறிக்கும் சொற்கள்


v    கொத்து  = அவரை, துவரை முதலியவற்றின் குலை

v    குலை = கொடி முந்திரி போன்றவற்றின் குலை

v    தாறு  = வாழைக் குலை

v    கதிர்  = கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்

v    அலகு அல்லது குரல்  = நெல், தினை முதலியவற்றின் கதிர்

v    சீப்பு = வாழைத்தாற்றின் பகுதி


கெட்டுப்போன காய் கனிக்கு வழங்கப்படும் சொற்கள்

v    சூம்பல்  = நுனியில் சுருங்கிய காய்

v    சிவியல் = சுருங்கிய பழம்

v    சொத்தை = புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி

v    வெம்பல்  = சூட்டினால் பழுத்த பிஞ்சு

v    அளியல் = குளுகுளுத்த பழம்

v    அழுகல் = குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்

v    சொண்டு = பதராய்ப் போன மிளகாய்

v    கோட்டான் (அ) கூகைக்காய் = கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்

v    தேரைக்காய்  = தேரை அமர்ந்ததினால் கெட்ட காய்

v    அல்லிக்காய்  = தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்

v    ஒல்லிக்காய்  = தென்னையில் கெட்ட காய்


பழங்களின் தோல் பகுதியை குறிக்கும் சொற்கள்


v    தொலி   = மிக மெல்லியது

v    தோல் = திண்ணமானது

v    தோடு = வன்மையானது

v    ஓடு = மிக வன்மையானது

v    குடுக்கை = சுரையின் ஓடு

v    மட்டை = தேங்காய் நெற்றின் மேற்பகுதி

v    உமி = நெல்,கம்பு முதலியவற்றின் மூடி

v    கொம்மை = வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி


தானியங்களுக்கு வழங்கும் பல்வேறு சொற்கள்

v    கூலம்  = நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள்

v    பயறு = அவரை, உளுந்து முதலியவை

v    கடலை = வேர்க்கடலை, கொண்டைக்கடலை முதலியவை

v    விதை = கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து

v    காழ்   = புளி, காஞ்சிரை (ருச்சு மரம்) முதலியவற்றின் வித்து

v    முத்து  = வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து

v    கொட்டை = மா, பனை முதலியவற்றின் வித்து

v    தேங்காய்   = தென்னையின் வித்து

v    முதிரை = அவரை, துவரை முதலிய பயறுகள்


தாவரங்களின் இளம் பருவத்தினை குறிக்கும் சொற்கள் 


v    நாற்று   = நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை

v    கன்று  = மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

v    குருத்து = வாழையின் இளநிலை

v    பிள்ளை = தென்னையின் இளநிலை

v    குட்டி = விளாவின் இளநிலை

v    மடலி அல்லது வடலி = பனையின் இளநிலை

v    பைங்கூழ்   = நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்


தமிழ்நாட்டில் நெல் வகைகள்

  • தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா,மட்டை,கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.
  • இவற்றோடு வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.தமிழ் நாட்டுள்ளும் தென்னாட்டிலேயே அவை விளைகின்றன.

தமிழ்த்திரு இரா இளங்குமரனார்

  • சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் = இரா. இளங்குமரனார்
  • திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” ஒன்றை அமைத்தவர் = இரா. இளங்குமரனார்.
  • “பாவாணர் நூலகம்” என்ற நூலகத்தை உருவாக்கியவர் = இரா. இளங்குமரனார்
  • தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் = இரா. இளங்குமரனார்
  • தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் = இரா. இளங்குமரனார்
  • “விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்” = இரா. இளங்குமரனார்.
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் = இரா. இளங்குமரனார்.
  • “தமிழ்த்திரு” என்று அழைக்கப்பட்டவர் = இர. இளங்குமரனார்
  • “உலகப் பெருந்தமிழர்” என்று அழைக்கப்பட்டவர் = இரா. இளங்குமரனார்.

இரா இளங்குமரனார் எழுதிய நூல்கள்


v  இலக்கண வரலாறு

v  தமிழிசை இயக்கம்

v  தனித்தமிழ் இயக்கம்

v  பாவாணர் வரலாறு

v  குண்டலகேசி உரை

v  யாப்பருங்கலம் உரை

v  புறத்திரட்டு உரை

v  திருக்குறள் தமிழ் மரபுரை

v  காக்கைப் பாடினிய உரை

v  தேவநேயம்.


முதல் உலகத் தமிழ் மாநாடு


v  உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு = மலேசியா.

v  மாநாட்டுக்குரிய அம்முதல் மொழி = தமிழே.

v  “பன்மொழிப் புலவர்” என அழைக்கப்படுபவர் = க.அப்பாத்துரையார்.


மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்


v  “மொழிஞாயிறு” என்று அழைக்கப்பட்டவர் = தேவநேயப்பாவாணர்.

v  பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர் = தேவநேயப்பாவாணர்.

v  “தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்” = தேவநேயப்பாவாணர்.

v  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் = தேவநேயப்பாவாணர்.

v  உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியாவர் = தேவநேயப்பாவாணர்.

v  உலகத் தமிழ் கழகத்தின் தலைவராக இருந்தவர் = தேவநேயப்பாவாணர்.


கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ்


v  போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது.

v ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது.

v  இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.


பலவுள் தெரிக


1. “காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது


A.      இலையும் சருகும்

B.      தோகையும் சண்டும்

C.      தாளும் ஓலையும்

D.      சருகும் சண்டும்


2.    “வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை” ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை


A.        குலை வகை

B.        மணி வகை

C.       கொழுந்து வகை

D.       இலை வகை


3.    மரஞ்செடியினின்று பூ கீழே விழந்த நிலையைக் குறிக்கும் சொல்.


A.       அரும்பு

B.       மலர்

C.       வீ

D.      செம்மல்

 

2.    “திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” என்னும் நூலை எழுதியவர்.

A.       திரு.வி.க

B.       பாவணர்

C.      கால்டுவெல்

D.      இரா. இளங்குமரன்

 

3.    “திருவள்ளுவர் தவச்சாலை” அமைந்துள்ள இடம்.


A.       அல்லூர்

B.       கல்லூர்

C.      நெல்லூர்

D.       திருவள்ளூர்

 

4.     குச்சியின் பிரிவு ……………. சொல்லால் அழைக்கப்படுகிறது?


A.         போத்த

B.         குச்சி

C.         சினை

D.        இணுக்கு

 

5.    பொருந்தாதவற்றை கண்டறிக


A.       தூறு

B.       கழி

C.      கழை

>


 






D.       கவை


6.     பொருந்தாதவற்றை கண்டறிக

A.         தாள்

B.        கிளை

C.         தண்டு





D.         கோல்

 

7.    “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்று பாடியவர்


A.       பாரதியார்

B.       பாரதிதாசன்

C.      பெருஞ்சித்திரனார்

D.      தேவநாயப்பாவணர்

 

7.    சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்


A.       தேவநேயப் பாவாணர்

B.       இளங்குமரனார்

C.      திரு.வி.க.

D.      மறைமலையடிகள்

 

8.    பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்.


A.       தேவநேயப் பாவாணர்

B.       திரு.வி.க.

C.      மறைமலையடிகள்

D.      இளங்குமரனார்

 

9.    விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்.


A.     தேவநேயப் பாவாணர்

B.      திரு.வி.க.

C.     இளங்குமரனார்

D.    மறைமலையடிகள்

 

9.    விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் பெற்ற இருவர்

A.    தேவநேயப் பாவாணர், இளங்குமரனார்

B.       மறைமலையடிகள், திரு.வி.க.

C.       திரு.வி.க., இளங்குமரனார்

D.      மறைமலையடிகள், இளங்குமரனார்

 

10. உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ……………. மாநாட்டிற்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் …………….


A.        மலேசியா, க.அப்பாத்துரையார்

B.           சிங்கப்பூர், தேவநேயப் பாவாணர்

C.           இந்தியா,  இளங்குமரனார்

D.           கனடா, ஜி.யு.போப்

 

11.    “பன்மொழிப் புலவர்” என்றழைக்கப்பட்டவர். 


A.           தேவநேயப் பாவாணர்

B.           க.அப்பாத்துரையார்

C.          இளங்குமரனார்

D.          ஜி.யு.போப்

 

12. சம்பா நெல்லின் உள் வகைகள். 


A.    80

B.    70

C.    60

D.    50

 

13.    “மொழிஞாயிறு” என்றழைக்கப்பட்டவர். 


A.        தேவநேயப் பாவாணர்

B.           க.அப்பாத்துரையார்

C.           இளங்குமரனார்

D.           ஜி.யு.போப்

 

14.     “தமிழ்ச்சொல் வளம்” எனும் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் . 


A.           மொழி மரபு

B.           தேவநேயம்

C.           ஆய்வியல் நெறிமுறைகள்

D.          சொல்லாய்வுக் கட்டுரைகள்

 

14.     “தமிழ்ச்சொல் வளம்” எனும் கட்டுரையின் ஆசிரியர் 

A.           மு.வ

B.           இளங்குமரனார்

C.           பொற்கோ

D.            தேவநேயப் பாவாணர்

 

15.     ஒரு நாட்டின் வளத்திற்கேற்ப அம்மக்களின் ………………. அமைந்திருக்கும்.


A.          அன்பொழுக்கம்

B.          களவொழுக்கம்

C.        அறிவொழுக்கம்

D.         கற்பொழுக்கம்

 

16.    பொருந்தா இணையைக் கண்டறிக


A.       சண்டு – காய்ந்த தாளும் தோகையும்

B.        சருகு -காய்ந்த இலை

C.        தாள் – புளி, வேம்பு முதலியவற்றின் இலை

D.    தோகை – சோளம், கம்பு முதலியவற்றின் இலை

 

17.   “செந்தமிழ்ச் சொற்பிறப்பியில் அகரமுதலி திட்ட இயக்குநராக” பணியாற்றியவர் . 


A.          தேவநேயப் பாவாணர்

B.          க.அப்பாத்துரையார்

C.         இளங்குமரனார்

D.         ஜி.யு.போப்

 

18.     உலக தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர். 


A.          க.அப்பாத்துரையார்

B.          இளங்குமரனார்

C.          ஜி.யு.போப்

D.        தேவநேயப் பாவாணர்

 

19.    போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர். 


A.           லெபனான்

B.           கெய்ரோ

C.          லிசுபன்

D.           ஹராரே

 

20. முதன்முதலாக “கார்டிலா” என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது . 


A.       நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

B.       செம்மொழி மாநாட்டு மலர்

C.       ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

D.    தமிழிலக்கிய வரலாறு மு.வ.

 

21. இந்திய மொழிகளிலேயே முதலில் மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய மொழி.

A.      தமிழ்

B.      மலையாளம்

C.      தெலுங்கு

D.      கன்னடம்

 

22.  தமிழ் மொழிக்காக மாநாடு நடத்திய நாடு .

A.       சிங்கப்பூர்

B.        இலங்கை

C.    மலேசியா

D.       கனடா


23.  பொருத்துக

1. தாள்

குத்துச்செடிபுதர் முதலியவற்றின் அடி

2. தண்டு

நெட்டிமிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி

3. கோல்

தண்டுகீரை முதலியவற்றின் அடி

4. தூறு

நெல்கேழ்வரகு முதலியவற்றின் அடி

விடை : 1 – , 2 – , 3 – , 4 – 

24.  பொருத்துக

1. தட்டு

கரும்பின அடி

2. கழி

புளிவேம்பு முதலியவற்றின் அடி

3. கழை

கம்புசோளம் முதலியவற்றின் அடி

4. அடி

மூங்கிலின் அடி

விடை : 1 – , 2 – , 3 – , 4 – 

25. பொருத்துக

1. கவை

அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் களை

2. கொம்பு

கிளையின் பிரிவு

3. சினை

கவையின் பிரிவு

4. போத்து

சினையின் பிரிவு

விடை : 1 – , 2 – , 3 – , 4 – 

26. பொருத்துக

1. இலை

தென்னைபனை முதலியவற்றின் இலை

2. சருகு

கம்புசோளம் முதலியவற்றின் அடி

3. கழை

புளிவேம்பு முதலியவற்றின் அடி

4. அடி

நெல்புல் முதலியவற்றின் இலை

விடை : 1 – , 2 – , 3 – , 4 – 

27. பொருத்துக

1. சுள்ளி

காய்ந்த குச்சு

2. விறகு

காய்ந்த சிறுகிளை

3. வெங்களி

காய்ந்த கொம்பும் கவையும்அடியும்

4. கட்டை

காய்ந்த கழி

விடை : 1 – , 2 – , 3 – , 4 – 

28. பொருத்துக

1. இளநீர்

வாழைப்பிஞ்சு

2. நுழாய்

இளநெல்

3. கருக்கல்

இளம்பாக்கு

4. கச்சல்

முற்றாத தேங்காய்

விடை : 1 – , 2 – , 3 – , 4 – 

29. பொருத்துக

1. சிவியல்

சூட்டினால் பழுத்த பிஞ்சு

2. அளியல்

பதராய் போன மிளகாய்

3. சொண்டு

குளுகுளத்த பழம்

4. வெம்பல்

சுருங்கிய பழம்

விடை : 1 – , 2 – , 3 – , 4 – 










More Study Materials 👉👉👉Click Here