Tamil Eligibility Test Study Materials - 03 - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, August 15, 2025

Tamil Eligibility Test Study Materials - 03

 







கண்ணதாசன் பற்றியக் குறிப்பு.

இயற்பெயர்   :           முத்தையா

பிறப்பு            :           24.6.1927

பெற்றோர்     :           சாத்தப்பன் – விசாலாட்சி

ஊர்                 :           சிவகங்கை – சிறுகூடல்பட்டி

சிறப்பு             :           தமிழக அரசவைக் கவிஞர்

புனைப்பெயர்:           வணங்காமுடி, ஆரோக்கியநாதன், காரைமுத்துப்புலவர்.

இறப்பு            :           17.10.1981

 

பலவுள் தெரிக.

1.       காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்.

A.  இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

B.   என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

C.   இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்

D.   என்மனம் இறந்துவிடாது இகழ

2.         காலத்தைக் வெல்பவன்.

A.   ஆசிரியர்

B.   அரசர்

C.  கவிஞன்

D.   ஓவியன்

3.         கண்ணதாசனின் இயற்பெயர் .

A.   முத்தரசன்

B.  முத்தையா

C.   முத்துக்குமார்

D.   முத்துசாமி

4.         கண்ணதாசன் பிறந்த மாவட்டம் .

A.  சிவகங்கை

B.   நெல்லை

C.   புதுக்கோட்டை

D.   இராமநாதபுரம்

விடை : சிவகங்கை

5.       கண்ணதாசன் பிறந்த ஊர்.

A.   முக்கூடல்

B.   சிவகங்கை

C.   கூடல் மாநகர்

D.  சிறுகூடல்பட்டி

6.       கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்கு பாடல் எழுதிய ஆண்டு.

A.   1939

B.  1949

C.   1959

D.   1969

7.         கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல்.

A.   வாழ நினைத்தால் வாழலாம்

B.   உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

C.   மலர்களைப் போல் தங்கை

D.  கலங்காதிரு மனமே

8.         சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்.

A.   மாங்கனி

B.  சேரமான்காதலி

C.   இயேசு காவியம்

D.   சிவகங்கைச் சீமை

9.         தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் .

A.   பாரதியார்

B.   வைரமுத்து

C.  கண்ணதாசன்

D.   மேத்தா

10.       கண்ணதாசன் அட்சயப்பாத்திரம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்

A.  தத்துவம்

B.   கொள்கை

C.   பண்பாடு

D.   ஞானம்

11.       “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என்றவர்.

A.   பாரதியார்

B.   வைரமுத்து

C.  கண்ணதாசன்

D.   மேத்தா

12.       “கவிஞன் யானோர் காலக் கணிதம்” என்று கூறியவர்.

A.   பாரதியார்

B.   வைரமுத்து

C.   மேத்தா

D.  கண்ணதாசன்

13.       “வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்” எனக் கூறியவர் ……………

A.  கண்ணதாசன்

B.   பாரதியார்

C.   வைரமுத்து

D.   மேத்தா

14.       கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் வழியாக மக்களுக்கு உணர்த்தியது.

A.           உலகியலை

B.        மெய்யியலை

C.           ஆன்மீகத்தை

D.           இலக்கணத்தை

15.       கண்ணதாசன் தன் வாக்கு மூலங்களாக எவற்றைக் குறிப்பிடுகிறார்?

A.           தன் நூல்களை

B.           உரைகளை

C.           இதழ்களை

D.           வளமார் கவிகளை

16.       கவிஞன் யானோர் காலக் கணிதம் – இவ்வடிகளில் அமைந்த நயம்.

A.           எதுகை

B.           மோனை

C.           இயைபு

D.           முரண்

17.       புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது

இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?

A.           என்னுடல் x என்மனம்

B.           புல்லரிக்காது x இறந்துவிடாது

C.           புகழ்ந்தால் x இகழ்ந்தால்

D.           புகழ்ந்தால் x என்மனம்

18.       ‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’ - அ) அடி எதுகையை எடுத்தெழுதுக.

A.  கொள்வோர் – உள்வாய்

B.  கொள்வோர் கொள்க

C.  குரைப்போர் குரைக்க

D.  உடம்பு தொடாது

19.     இலக்கணக் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க

v  கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்று

v  காலக்கணிதம் – உருவகம்

v  ஆக்கல், அளித்தல், அழித்தல் – தொழிற்பெயர்

v  கொள்க, எழுதுக – வியங்கோள் வினைமுற்று

v  கொள்வோர் – வினையாலணையும் பெயர்

v  அறிந்து – வினையெச்சம்

20.     பகுபத உறுப்பிலக்கணம்

1.       அமர்வேன் =  அமர் + வ் + ஏன்

v  அமர் – பகுதி

v  வ் – எதிர்கால இடைநிலை

v  ஏன் – குறிப்பு வினைமுற்று விகுதி

2.       அழித்தல் = அழி + த் + த் + அல்

v  அழி – பகுதி

v  த் – சந்தி

v  த் – இறந்தகால இடைநிலை

v  அல் – தொழில்பெயர் விகுதி

3.       இறந்த = இற + த்(ந்) + த் + அ

v  இற – பகுதி

v  த் – சந்தி

v  ந் – ஆனது விகாரம்

v  த் – இறந்தகால இடைநிலை

v  உ – பெயரெச்ச விகுதி

21.     காலக்கணிதம் கவிதையில் இடம் பெறும் முரண் சொற்களை எழுதுக.

v    சரி  x  தவறு

v    புகழ்ந்தால்  x  இகழ்ந்தால்

v    ஆக்கல் x அழித்தல்

v    தீமை  x  நன்மை

v    அவனும் x யானும்

v    தொடக்கம்  x  முடிவு

v    உண்டாயின்  x  இல்லாயின்








More Study Materials 👉👉👉Click Here