Tamil Eligibility Test Study Materials - 05 - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, August 15, 2025

Tamil Eligibility Test Study Materials - 05

                               




சொல்

'பூ மலர்ந்தது.'

'மாடு புல் தின்றது.'

ஓர் எழுத்து தனித்தோபல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும். அது,

அ) இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்.

ஆ) மூவகை இடங்களிலும் வரும்.

இ) உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.

ஈ) வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்.

மூவகை மொழி

தனி மொழிதொடர்மொழிபொதுமொழி என மொழி மூன்று வகையாக அமையும்.

ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி

பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன. - (நன்னூல் - 260)

தனிமொழி

ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி  எனப்படும்.

எ.கா. கண்படி பகாப்பதம்

கண்ணன்படித்தான் - பகுபதம்

தொடர்மொழி

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.

எ.கா. கண்ணன் வந்தான்.

மலர் வீட்டுக்குச் சென்றாள்.

பொதுமொழி

ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.

எ. கா.

எட்டு - எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்.

வேங்கை - வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.

இவையே எள் + து எனவும் வேம் + கை எனவும் தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண்வேகின்ற கை எனவும் பொருள் தரும். இவை இருபொருள்களுக்கும் பொது வாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது.

தொழிற்பெயர்

ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண்இடம்காலம்பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.

எ.கா. ஈதல்நடத்தல்

விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்

வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.


ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.

எ.கா. நட என்பது வினையடி

நடைநடத்தை

எதிர்மறைத் தொழிற்பெயர்

எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.

எ.கா. நடவாமைகொல்லாமை

முதனிலைத் தொழிற்பெயர்

விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும்.

எ.கா. தட்டுஉரைஅடி

இச்சொற்கள் முறையே தட்டுதல்உரைத்தல்அடித்தல் என்று பொருள் படும் போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.

எ.கா. பேறு


வினையாலணையும் பெயர்

ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும். அது தன்மைமுன்னிலைபடர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.

எ.கா. வந்தவர் அவர்தான்.

பொறுத்தார் பூமியாள்வார்.

தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடு


பலவுள் தெரிக

1.         பொதுமொழிக்குரிய சான்றினைத் தேர்வு செய்க.


அ) படி

ஆ) வேங்கை

இ) கண்ண ன்

ஈ) கண்ணன் வந்தான்


2.         எட்டு = எள் + து எனப் பிரிந்து தரும் பொருள்


அ) எட்டு

ஆ) எள்ளை உண்

இ) வேகின்ற கை

ஈ) எள்ளை எடு


3.         பொருத்துக.


1. நடத்தல் – அ) எதிர்மறைத் தொழிற்பெயர்

2. கொல்லாமை – ஆ) வினையாலணையும் பெயர்

3. கேடு – இ) தொழிற்பெயர்

4. வந்தவர் – ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்


அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.இ 2.அ 3.ஈ. 4.ஆ

இ) 1.இ 2.ஆ 3.ஈ. 4.அ

ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ


4.         எதிர்மறைத் தொழிற்பெயர் சான்றினைத் தேர்ந்தெடுக்க.


அ) கொல்லாமை

ஆ) வாழ்க்கை

இ) நடத்தல்

ஈ) சூடு


5.         மொழியின் சிறப்புகளை அறிய துணை செய்வது


அ) கவிதை

ஆ) இலக்கணம்

இ) உரைநடை

ஈ) எதுவுமில்லை


6.         சார்பெழுத்துகளின் எண்ணிக்கை


அ) முப்பது

ஆ) பன்னிரண்டு

இ) பத்து

ஈ) ஒன்பது


7.         மொழி என்பது எத்தனை வகை?


அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஐந்து

ஈ) ஆறு


8.         அந்தமான்” என்பது எவ்வகை மொழி?


அ) தொடர் மொழி

ஆ) தனி மொழி

இ) பொது மொழி

ஈ) எதுவுமில்லை


9.         பொருத்திக் காட்டுக.


1. அந்தமான் – அ) தொடர்மொழி

2. கண் – ஆ) தொழிற்பெயர்

3. நடத்தை – இ) பொதுமொழி

4. கண்ணன் வந்தான் – ஈ) தனிமொழி


அ) 1.ஆ 2.ஈ 3.அ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ

ஈ) 1.இ 2.ஆ 3.ஈ 4.அ


10.       தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது


அ) தொழிற்பெயர்

ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

இ) முதனிலைத் தொழிற்பெயர்

ஈ) வினையாலணையும் பெயர்


11.       மூவிடத்திற்கும் உரியது ………….; படர்க்கைக்கே உரியது ………….


அ) தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்

ஆ) வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்

இ) உரிச்சொற்றொடர், வினையாலணையும் பெயர்

ஈ) இவற்றில் எதுவுமில்லை


12.       நடத்தல்’ என்னும் சொல்லில் ‘நட’ என்பது


அ) வினையடி

ஆ) விகுதி

இ) தொழிற்பெயர்

ஈ) இடைநிலை


13.       வேம் + கை’ என்பதன் பொருள்


அ) வேட்கை

ஆ) வேங்கை

இ) வேகின்ற கை

ஈ) வேகாத கை


14.      வாழ்க்கை ‘ என்னும் சொல்லுக்குரிய விகுதியைக் குறிப்பிடுக.


அ) வாழ்

ஆ) க்

இ) கை

ஈ) ஐ


15.       கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே


            A. பாடிய; கேட்டவர்
            B. பாடல்; பாடிய
            C. கேட்டவர்; பாடிய
            D. பாடல்; கேட்டவர்


16.     சொல்லோடு தொடர்பில்லாத ஒன்று

            அ)    ஓர் எழுத்து தனித்து வருதல்
            ஆ)   பல எழுத்துகள் சேர்ந்து வருதல்
            இ)    பொருள் இன்றியும் வருதல்
            ஈ)    வெளிப்படையாகவும் வருதல்

17.     ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
          பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன எனக் கூறும் நூல்

            அ)    தொல்காப்பியம்
            ஆ)   தொன்னூல் விளக்கம்
            இ)    நன்னூல்
            ஈ)    இலக்கண விளக்கம்

18.     ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது

            அ)    தனிமொழி
            ஆ)   தொடர்மொழி
            இ)    பொதுமொழி
            ஈ)     நிலைமொழி

19.     இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து பொருள் தருவது

            அ)    தனிமொழி
            ஆ)   தொடர்மொழி
            இ)    பொதுமொழி
            ஈ)     நிலைமொழி

20.     ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது

            அ)    தனிமொழி
            ஆ)   தொடர்மொழி
            இ)    பொதுமொழி
            ஈ)     வருமொழி

21.     பொருந்தாத ஒன்றைக் கண்டறிக

            அ)    பலகை
            ஆ)   வேங்கை
            இ)    வாழ்க்கை
            ஈ)     எட்டு

22.     ஒரு வினையைக் குறிக்கும் பெயர்

            அ)    பெயர்ச்சொல்
            ஆ)   வினைச்சொல்
            இ)    தொழிற்பியர்
            ஈ)     வினையாலனையும் பெயர்

23.     வினையடியுடன் விகுதி சேர்ந்து வருவது

            அ)    தொழிற்பெயர்
            ஆ)   விகுதி பெற்ற தொழிற்பெயர்
            இ)    எதிர்மறைத் தொழிற்பெயர்
            ஈ)     முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்

24.     தொழிற்பெயருடன் தொடர்பில்லாத ஒன்று

            அ)    காலம் காட்டாது
            ஆ)   ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்
            இ)    எதிர்மறைப் பொருளிலும் வரும்
            ஈ)    மூவிடங்களிலும் வரும்

25.     ஒரு வினைமுற்று பெயரின் தன்மையும் வேற்றுமை உருபையும் ஏற்பது
            அ)    தொழிற்பெயர்
            ஆ)   தொடர்மொழி
            இ)    வினையாலனையும் பெயர்
            ஈ)     எழுவாய்த்தொடர்





More Study Materials 👉👉👉Click Here