10TH TAMIL - பொது இலக்கணம் Pothu Ilakkanam - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Monday, September 29, 2025

10TH TAMIL - பொது இலக்கணம் Pothu Ilakkanam

 


இருதிணை

திணை இரண்டு வகைப்படும்.

அவை உயர்திணை, அஃறிணை என்பன.

உயர்திணை - மக்கள், நரகர், தேவர்

அஃறிணை - பிற உயிருள்ள, உயிரற்ற அனைத்தும்

ஐம்பால்

பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப் பொருள்படும்.

இப்பால்  ஐந்து வகைப்படும்.

அவை, உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால். ஒன்றன்பால், பலவின்பால் என்பன.

இப்பால் திணையோடு தொடர்புடையதாகவும் அமைகிறது.

உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றும் அடங்கும்.

அஃறிணையில் ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டும் அடங்கும்.

சான்றாக, 

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்

வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால்

மகள், அரசி, தலைவி - பெண்பால்

மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால்

அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்

ஒரு பொருளைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்

எ.கா. யானை, புறா, மலை

பல பொருட்களைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.

எ.கா. பசுக்கள், மலைகள்

மூவிடம்:

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.


வழு - வழாநிலை - வழுவமைதி

இலக்கண முறைப்படி பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.

இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்

இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தாலும் அவற்றை ஏதேனும் ஒரு காரணம் கருதி ஏற்றுக் கொள்வது வழாநிலை ஆகும்.


வழுவமைதி

இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

1. திணை வழுவமைதி

மாட்டைப் பார்த்து "என் அம்மை வந்தாள்" என்று கூறவது திணை வழுவாகும்.

ஆயினும், மகிழ்ச்சியின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுவதால் இது திணை வழுவமைதியாயிறறு..

2. பால் வழுவமைதி

"வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். 

இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

3. இட வழுவமைதி

மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.

4. கால வழுவமைதி

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.

இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.

5. மரபு வழுவமைதி

கத்துங் குயிலோசை - சற்றே வந்து

காதிற் படவேணும்" - பாரதியார்.

குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். 

இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. திணை எத்தனை வகைப்படும்.

அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) ஏழு

2. அஃறிணை என்பது.

அ) மக்கள்
ஆ) நரகர்
இ) தேவர்
ஈ) பிற

3. பால் எத்தனை வகைப்படும்.

அ) இரண்டு
ஆ) ஐந்து
இ) மூன்று
ஈ) ஏழு

4. உயர்தினை எத்தனைப் பிரிவுகளைக் கொண்டது

அ) இரண்டு
ஆ) ஐந்து
இ) மூன்று
ஈ) ஏழு

5. அஃறிணை எத்தனைப் பிவுகளைக் கொண்டது

அ) இரண்டு
ஆ) ஐந்து
இ) மூன்று
ஈ) ஏழு

6. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) பசு
ஆ) புறா
இ) நண்பன்
ஈ) மலைகள்

6. இடம் எத்தனை வகைப்படும்.

அ) இரண்டு
ஆ) ஐந்து
இ) மூன்று
ஈ) ஏழு

7. இலக்கண முறைப்படிப் பேசுவதும் எழுதுவதும்

அ) வழு
ஆ) வழுவமைதி
இ) வழாநிலை
ஈ) ஏதுமில்லை

8. இலக்கண முறை இன்றிப் பேசுவதும் எழுதுவதும்

அ) வழு
ஆ) வழுவமைதி
இ) வழாநிலை
ஈ) ஏதுமில்லை

9. இலக்கண முறைப்படி அமையாவிட்டாலும் ஏதேனும் ஒரு காரணம் கருதி ஏற்றுக் கொள்வது.

அ) வழு
ஆ) வழுவமைதி
இ) வழாநிலை
ஈ) ஏதுமில்லை

10. அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார் என்பது எவ்வகை வழுவமைதி

அ) இட வழுவமைதி
ஆ) கால வழுவமைதி
இ) மரபு வழுவமைதி
ஈ) இவற்றில் ஏதுமில்லை

11. கத்தும் குயிலோசை எந்தன் காதில் விழ வேண்டும் என்பது எவ்வகை வழுவமைதி

அ) இட வழுவமைதி
ஆ) கால வழுவமைதி
இ) மரபு வழுவமைதி
ஈ) இவற்றில் ஏதுமில்லை

12. தாய் தன்மகளை வாடா ராசா, வாடா கண்ணா என்று கூப்பிடுவது எவ்வகை வழுவமைதி

அ) இட வழுவமைதி
ஆ) கால வழுவமைதி
இ) மரபு வழுவமைதி
ஈ) பால் வழுவமைதி

13. என் அம்மை வந்தாள் என்று மாட்டைக்  கூறுவது எவ்வகை வழுவமைதி

அ) திணை வழுவமைதி
ஆ) கால வழுவமைதி
இ) மரபு வழுவமைதி
ஈ) பால் வழுவமைதி

14. தென்னந்தோட்டம் என்பது.

அ) வழு
ஆ) வழுவமைதி
இ) வழாநிலை
ஈ) ஏதுமில்லை

15. கண்ணகி உண்டாள் என்பது.

அ) வழு
ஆ) வழுவமைதி
இ) வழாநிலை
ஈ) ஏதுமில்லை