- பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் = குலேசபாண்டியன்.
- கபிலரின் நண்பர் = இடைக்காடனார்.
- பாண்டிய மன்னன் இடைக்காடனாரை அவமதித்தான்.
- இடைக்காடனார் யாரிடம் முறையிட்டார் = இறைவனிடம்.
- இறைவன் எந்த கோவிலை விட்டு நீங்கினார் = கடம்பவனக் கோவிலை
- இறைவன் எங்கு சென்று தங்கினார் = வடதிரு ஆலவாயில்.
- வேப்பமாலை அணிபவன் = பாண்டியன்
சொல்லும் பொருளும்:
கேண்மையினான் – நட்பினன்
பனுவல் - நூல்
ஆலவாய் - மதுரை
இறந்த - கடந்த
புகல - சோல்ல
தார் - மாலை
முடி – தலை
முனிவு – சினம்
மொழிந்த - கூறி
முனிவு - சினம் (கோபம்)
உறைப்ப - கூற
அகத்து உவகை - மனமகிழ்ச்சி
வானவர் - தேவர்
தமர் - உறவினர்
தொல்லை - தொன்மையான
தண்பணை - குளிர்ந்த வயல்
நீபவனம் - கடம்பவனம்
நீத்து - விடுத்து
மாற்றம் - பதிலுரை
மீனவன் - பாண்டிய மன்னன்
இறைஞ்சுதல் - பணிந்து வேண்டுதல்
கதலி - வாழை
பூகம் - கமுகு (பாக்கு)
கவரி - சாமரை (கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)
விதானம் - மேற்கூரை
கதலிகை - கொடி
சேக்கை - இருக்கை
நுவன்ற - சொல்லிய
தண்ணிய - குளிர்ந்த
என்னா - அசைச் சொல்
இலக்கணக் குறிப்பு
காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
இ) திரு ஆல்வாய்க் காண்டம்
ஈ) யுத்த காண்டம்
14. வேப்பமாலை அணிந்த மன்னன்
பகுபத உறுப்பிலக்கணம்
தணிந்தது – தணி + த்(ந்) + த் + அ + து
தணி - பகுதி, த் - சந்தி
த்(ந்) - ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - சாரியை, து - படர்க்கை வினைமுற்று விகுதி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. திருவிளையாடற்புராணம் என்னும் நூலை இயற்றியவர்
அ) சேக்கிழார்
ஆ) பரஞ்சோதி முனிவர்
இ) நம்பியாண்டார் நம்பி
ஈ) சுந்தரர்
2. திருவிளையாடற்புராணம் எத்தனைக் காண்டங்களை கொண்டது.
அ) 30
ஆ) 64
இ) 3
ஈ) 10
3. திருவிளையாடற்புராணம் எத்தனைப் படலங்களைக் கொண்டது.
அ) 30
ஆ) 64
இ) 3
ஈ) 10
4. பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர்.
அ) திருச்சீரலைவாய்
ஆ) திருமறைக்காடு
இ) மயிலாடுதுறை
ஈ) மதுரை
5. பரஞ்சோதி முனிவர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்.
அ) பத்தாம் நூற்றாண்டு
ஆ) பன்னிரண்டாம் நூற்றாண்டு
இ) பதினேழாம் நூற்றாண்டு
ஈ) பத்தொன்பதாம் நூற்றாண்டு
6. பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) கூர்மபுராணம்
ஆ) வேதாரண்யப் புராணம்
இ) திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா
ஈ) பதிற்றுப்பத்தந்தாதி
7. புலவருக்குக் கவரி வீசிய மன்னன்.
அ) மாந்தரஞ்சேரல் இரும்பொறை
ஆ) பெருஞ்சேரல் இரும்பொறை
இ) இளஞ்சேரல் இரும்பொறை
ஈ) முடத்திருமாறன்
8. பெருஞ்சேரல் இரும்பொறை எந்தப் புலவருக்குக் கவரி வீசினான்.
அ) மோசிக் கொற்றன்
ஆ) மோசிகீரனார்
இ) மோசி கண்ணத்தனார்
ஈ) மோசிக்கரையனார்
9. மோசிகீரனாருக்கு பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசியதைக் கூறும் இலக்கியம்.
அ) பதிற்றுப்பத்து
ஆ) புறநானூறு
இ) பொருணராற்றுப்படை
ஈ) மலைபடுகடாம்
10. கேள்வியினான் - இலக்கணக்குறிப்பு தருக.
அ)பண்புத்தொகை
ஆ) வினைமுற்றுத்தொடர்
இ) வினையாலனையும் பெயர்
ஈ) தொழிற்பெயர்
11. கோபத்தீத் தணிந்தது என்னா இத்தொடரில் என்னா என்பது
அ) உவம உருபு
ஆ) இடைச்சொல்
இ) அசைச்சொல்
ஈ) விளித்தொடர்
12. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் அமைந்த நூல்.
அ) திருவிளையாடற்புராணம்
ஆ) வேதாரண்யப் புராணம்
இ) திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா
ஈ) பதிற்றுப்பத்தந்தாதி
13. இடைக்காடனார் பிணக்கு தீரத்த படலம் இடம் பெறும் காண்டம்
அ) மதுரைக்காண்டம்
ஆ) கூடற்காண்டம்இ) திரு ஆல்வாய்க் காண்டம்
ஈ) யுத்த காண்டம்
14. வேப்பமாலை அணிந்த மன்னன்
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
15. இடைக்காடரின் நண்பர்.
அ) ஔவையார்
ஆ) மோசிகீரனார்
இ) கபிலர்
ஈ) பரணர்