கணிதமும் வரலாறும் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, October 28, 2020

கணிதமும் வரலாறும்

                                



      கணிதம் நாகரிகத்தின் கண்ணாடி என்று ஹாக்பென் (Hogben) என்ற கணித நூலார் கூறியுள்ளார். வரலாற்றில் ஒவ்வொரு படியிலும் அறிவியலும் அதற்கு அடிப்படையான கணிதமும் பலவாறாகப் பங்கு கொண்டுள்ளன. கிரேக்கரின் கட்டடக் கலையும், எகிப்தியரின் கட்டட கலையும் கிரேக்கரின் வடிவியல் அறிவையே பெரிது சார்ந்தனவாகும். முழுவதும் தொழில் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அமைந்த நம்முடைய தற்கால நாகரிகத்திற்குக் கணிதமும், அறிவியலும் முக்கியமான தூண்கள் போன்றவை. கணிதத்தை முற்றிலும் நீக்கிய வரலாற்று அறிவோ அல்லது வரலாற்றைப் பற்றிச் சிறிதும் தெரிந்து கொள்ளாத கணித அறிவோ முழுமையற்றது என்றே கூறவேண்டும்


உயர்நிலைப் பள்ளிகளில் கணிதப் பாடத்தின் இடம்


கணிதம் அறிவியல் துறைகளில் தலைசிறந்த ஒரு பகுதியாகும். வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் அது கலந்திருக்கின்றது. கணிதம் சுற்கும் மாணவர் யாவரும் அதன் இயல்பு பற்றி அறிதல் வேண்டும். மேலும், சதவீதம் இயற்கணிதம், விகிதம், விகித சமம், கோண கணிதம், வடிவியல் உருவங்கள் முதலியவற்றைப் பற்றி மக்கள் பேசும்போது, அவற்றைப் பற்றி எவ்வாறு பொருள் கொள்கிறார்கள் என்பதை யாவரும் அறிவது அவசியம். 

           செய்தித்தாள்கள், வார, மாத இதழ்களில் காணப்படும் வானவெளி, கடல் போக்குவரத்து பற்றிய குறிப்புகள், தொழில்துறை, பொறியியல், வாணிகம் முதலியவற்றைப் பற்றிய புள்ளியியல் விவரங்கள் வரைபடங்கள் முதலியவற்றை அறிய இயலாமல் வாழ்வில் முன்னேறுவது இயலாத காரியம். வாழ்க்கைச் செலவுகளின் ஏற்ற இறக்கங்களைக் காட்டப் பயன்படும். வாழ்க்கைச் செலவுக் குறியீட்டு எண்ணைப் (cost of living index) பற்றிப் புரிந்து கொள்வது அவசியம். இதன் அடிப்படையிலேயே அவ்வப் போது தொழிலாளரின் பஞ்சப்படி மாற்றியமைக்கப்படுகின்றது.