நாட்டின் பொருளாதார நிலையைத் தெரிந்து கொள்வதற்கு வாணிகம், விவசாயம், தொழில்துறைகளைச் சார்ந்த அடிப் படைப் புள்ளி விவரங்களும் அவற்றிற்கான வரைபட விளக்கங் களும் தேவைப்படுகின்றன. மேலும், நிலப்படங்களும் (Cartography), தலப்படங்களும் (topography) வரைவதற்குத் தேவையான நில அளவீடு முறைகளுக்குச் (surveying) செயல் முறை வடிவியலும், கோண கணிதமும் தேவைப்படுகின்றன.
அளவு திட்டங்கள் (Scales)
நிலப்படங்கள் வரையும் போது, பரந்த நிலப்பரப்பிலுள்ள விவரங்கள் அனைத்தையும் சிறிய தாளில் காட்ட வேண்டி யிருப்பதால் தாளின் அளவு விகிதத்திற்கேற்ப நிலப்படங்களும் தயாரிக்கப்படுகின்றன.
நிலப்படத்தில் ஏதேனும் இரு புள்ளிகளுக்கிடையிலுள்ள தூரத்திற்கும், தரையின் மீது அப் புள்ளிகள் குறிக்கும் இடங்களுக்கு இடையே உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் அளவு திட்டம் (scale) எனப்படும். அளவு திட்டத்தில் விகிதத்தை ஒரு பின்னமாகக் காட்டலாம். அவ்வாறு குறிக்கும் போது தொகுதியினையும், பகுதியினையும் ஒரே அலகில் குறிக்க வேண்டும். தொகுதி எப்போதும் ஒன்றாகவும், பகுதி அதற்கேற்ற முறையிலும் இருக்க வேண்டும்
பிரதி பின்ன ம் :
நிலப்படத்தில் தூரம் தரையில் தூரம்
உதாரணமாக : தரையில் ஒரு கிலோமீட்டரைப் படத்தில் ஒரு செ. மீட்டராகக் காட்டினால்
பிரதி பின்னம் அல்லது 1:1,00,000
புவியியல் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களை வரைபடங்களாகக் குறிக்கலாம். ஒரு குறிப்பிட்ட பொருள் பல நாடுகளில் உற்பத்தியாகும் அளவுகளை வரைபடங்களினால் ஒப்பிடலாம் ஓர் ஊரில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தியாகும் ஒரு பொருள், ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பல சரக்குகள், ஒரு நாட்டின் மக்கள் தொகை எல்லாவற்றையும் பட்டை விளக்கப் படங்கள் (bar diagram), வட்ட விளக்கப்படங்கள் (pie diagram) முதலியவற்றால் விளக்கிக் காட்டலாம்.