உடல் , அறிவு , சமூக வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, October 28, 2020

உடல் , அறிவு , சமூக வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு

 



ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி என்று கூறும் போது, வயது எடை, உயரம், உண்ணும் உணவின் அளவு, உணவின் கலோரி அளவு, இதயத்துடிப்பு, இரத்த ஓட்டத்தின் வேகம், அளவு..... என்று கூறிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றில் கணக்கீடுகளிலும் கணக்குப் பாடத்தின் பயன்பாடு மிகவும் இன்றியமையாதது. ஒருவரது உடல் வளர்ச்சி அவரது வயது. அலுவல் தேவைகள் போன்றவற்றிற்கேற்ற தர அளவில் உள்ளதா எனக் கண்டறிந்து குறைகளை நிறைவாக்கவும். மிகையாக உள்ளன வற்றை வேண்டிய அளவு குறைக்கவும் கணிதம் காட்டும் அளவு முறைகள் தேவைப்படுகின்றன. சரியான வளமான உடல் வளர்ச்சிக்கு வேண்டியவற்றை வேண்டிய அளவு அமைத்துக் கொள்ள கணிதப் பாட அறிவு உதவுகிறது


அறிவு வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு

                                            ஒவ்வொரு வகுப்பிலும் மாணவன் பெறும் கற்றல் திறன் அடைவுகளே அறிவு வளர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன. இதைப்பற்றிய விளக்கம் அதிகம் தேவையில்லை. அது மட்டுமின்றி, கணிதக் கருத்துகள் தனித்து இயங்காமல், அதன் பயன்பாடு மற்ற பாடங்கள் / துறைகளுடன் இணைந்து செயல்படுகிறது. மொழிப்பாடங்களில் மட்டுமின்றி இயற்பியல் வேதியியல், உயிரியல், பொறியியல், மருத்துவம் போன்ற எல்லாவிதமான அறிவியல் துறைகளுக்கும் கணிதக் கருத்து களும், விதிகளும், முறைகளும் அடித்தளமாக அமைகின்றன.


சமூக வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு

                                   'சமூகம் என்ற சொல்லே, பலரும் கூடி வாழ்தலைக் குறிக்கிறதேயள்றி, ஒரு தனி மனிதனை அல்ல. அவ்வாறே கணக்குப்பாடம் என்று கூறும்போது, தனித்து நிற்காமல் மற்றப் பாடங்களோடு பின்னிப் பிணைந்தே காணப்படுகிறது. தனி மனித வளர்ச்சியே சமூக வளர்ச்சிக்கு அடிப்படை. அவ்வாறே, கணிதப்பாட வளர்ச்சியே மற்ற பாடங்களின் துறைகளின் வளர்ச்சிக்கு அடிக்கல்லாகும். மேலும், சமூக நெறிக்கு உகந்த பண்புகளான பொறுமை, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை, கூட்டு மனப்பான்மை போன்ற பல பண்புகள் கணிதப் பாடத்தில் பிரச்சினைகளைத் தீர்க்கும் போது பயன்படுவதால் கணிதம் படிக்கும் மாணவர்களின் நடத்தையிலும் அக்குணங்கள் பிரதிபலிக்கின்றன.