அன்றாட வாழ்க்கையில் கணிதம் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, October 28, 2020

அன்றாட வாழ்க்கையில் கணிதம்

 


  முன்னுரை                      

                                 அன்றாட வாழ்க்கைச் சூழலிலிருந்து ஒரு நிமிடம் கணக்கின் பயன்பாட்டினை நிறுத்துங்கள்! என்ன நிகழும்? உலகமே ஸ்தம்பித்து விட்டது போன்று தோன்றுமல்லவா? கணக்குக் கூறுகள், வாக்கியங்கள் ஏன் எண்களின் பயன்பாடு இன்றி, நாம் வாழ்க்கை நடத்தவே முடியாது. எத்தனை? எவ்வளவு? என்ன என்னும் கேள்விகளுக்கு மனிதன் விடைகாண முயலும்போது இயற்கணிதம்' பிறந்தது. அளவைகள், வடிவம் ஆகியவை பற்றிச் சிந்திக்கும் போது 'வடிவியல்' கண்டுபிடிக்கப் பட்டது. மலையின் உயரம், இரு இடங்களுக்கு இடையேயான தூரம் போன்றவற்றைக் கணக்கிட முயலும் போது 'முக்கோண அளவியல்' கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறே வரைபடம் புள்ளியியல், பகுமுறை வடிவியல், இயற்கணிதம் போன்ற கணிதத்தின் பிற பகுதிகளும் தேவைகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு பழக்கத்தில் வந்தன. மனிதனின் தேவைகள் பெருகப்பெருக, கணிதத்தின் கண்டுபிடிப்புகள் பெருகின, பெருகிக் கொண்டிருக்கின்றன


                                                       எந்த நாட்டிலும், ஒரு தனி மனிதன் எழுதப் படிக்கத் தெரியாமல் தன் வாழ்நாளைக் கழிக்க முடியும். ஆனால் எண்ணுவதற்கும், கணக்கிடுவதற்கும் தெரியவில்லை எனில் அவனால் தன்னிச்சையாக வாழ முடியாமல், பிறரைச் சார்ந்தே வாழும் நிலை ஏற்படுகின்றது. 3 R's (Reading, Writing and Arithmatic) என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையானாலும் அதிலும் முன்னிலை வகிப்பது கணக்கீடேயாகும் வாய்மையை வாழ்க்கையாகக் கொண்ட மகாத்மா காந்தியடிகள் வாய்மையே கடவுள்' (Truth is God) எனக் குறிப்பிட்டார் ஆனால் தேசியத் தலைவர் பூமிதான இயக்கத்தின் முன்னோடி வினோபா பாவே ஒரு கணித அறிஞரும் கூட. அவர் காந்திஜியின் கூற்றையே, 'கணிதமே கடவுள் (Mathematics is God) எனக் கூறினார். கணக்குப் பாடம் உண்மைகளைக் கொண்ட பாடம் என்னும் கருத்தை (Mathematics is the Subject of Truth) இது வலியுறுத்துகிறது.

வீட்டுச் சூழலில் கணிதத்தின் பங்கு

                                                                       வீடு என்று கூறும்பொழுது நினைவிற்கு வருவது நாம் வாழுமிடம், வீட்டில் உள்ள அங்கத்தினர்கள், வீட்டில் உள்ள பொருள்கள், உணவு, வரவு, செலவு, திட்டமிடுதல் போன்றன. மாத வருமானத்தைத் திட்டமிட்டு செலவு செய்தல், பொருள் களை வாங்குதல், சேமித்தல், அங்கத்தினர்களின் எண்ணிக் கைக்கும், தேவைக்கும் ஏற்பஉணவு தயாரித்தல், சிக்கனமாகச் செலவு செய்தல் போன்ற பொருளாதார செய்கைகளுக்கும், ஒரு தாளின் பல்வேறு செயல்களுக்கு நேரத்தைத் திட்டமிடுவதற்கும் கணிதப் பயன்பாடு அவசியம். சிக்கனம் என்ற கோட்பாடு, பொருளாதாரத்திற்கு மட்டுமன்றி நேரத்திற்கும் சாலப் பொருந்தும். சரியாகத் திட்டமிடல், முன்கூட்டியே திட்டமிடல் கணக்கிடுதல் ஆகியவற்றின் மூலம் சிக்கனம் சாத்தியமாகிறது திட்டமிட்டுச் செயல்படாத வாழ்க்கை ஆளில்லாத படகிற்குச் சமம், இச்செயல்கள் கணிதப் பாடத்தின் பயன்பாட்டினால்தான் இயலும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .