பள்ளிச் சூழலில் கணிதத்தின் பங்கு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, October 28, 2020

பள்ளிச் சூழலில் கணிதத்தின் பங்கு




                                                             ஒரு பள்ளியின் அன்றாடச் செயல்கள் காலைப் பிரார்த் தனைக் கூட்டத்தில் துவங்கி, மாலை விளையாட்டு வகுப்பில் முடிவடையும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் கால அட்டவணை, மாணவர் / ஆசிரியர் வருகை, பாடப்பொருள் பாடப் பொருளுக்கேற்ப நேரத்தைத் திட்டமிடல், மாணவர்களின் மதிப்பெண்கள், அவர்களின் தரம் கணக்கிடல் போன்ற பள்ளியின் அன்றாட நிகழ்ச்சிகளில் கணக்கின் பயன்பாட்டினை உணர முடிகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பள்ளிச் சூழலில் நேரடியாகக் கணிதத்தைப் பயன்படுத்துகின்றோம். கணக்குப் பாடம் படிப்ப தால் மறைமுகமாகப் பலவித பழக்கங்களும், உணர்வுகளும் மாணவர்கள் மளத்தில் வளர்கின்றன. 

அவற்றுள் சில


(அ) எளிமையான கட்டமைப்பு : 

                                                  கணக்குப் பாடம் பல உண்மைகளையும், விதிகளையும் உள்ளடக்கியது இவை எளிமையிலிருந்து கடினத்தை நோக்கிச் சீரமைக்கப்பட்டுள்ளதால் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதிக்கு எளிமையாகச் சென்றடைய முடியும். உண்மைக்குப் புறம்பான எதுவுமே கணக்குப் பாடத்தில் இடம் பெறாது. கருத்துகளை எளிமையாகப் புரிந்து கொள்ளுதலே இப்பாடத்தின் தனிச்சிறப்பு. வாழ்க்கைச் சூழலில் இதனைப் பயன்படுத்தும் பொழுது, சூழ்நிலைச் சிக்கல்களைப் புரிந்து கொண்டு . தீர்வினை நோக்கி ஒவ்வொரு படியாகச் சென்று சுமூகமான தீர்வினை அடைய வழி செய்கிறது


(ஆ) நுட்பமும், துல்லியமும் : 

                                            எவ்விதக் கருத்து வேறுபாட் டிற்கும் இடமின்றி நூறுசதவீதத் துல்லியமான முடிவு களையே கணக்குப்பாடம் வலியுறுத்துகிறது. ஒரு கணக்குச் சிக்கல் எம்முறையில் தீர்க்கப்படினும் அதனின் துல்லியமான தீர்வு மாறாது. அவ்வாறே வாழ்க்கைச் சூழலிலும், எந்தக் காரியத்திலும் துல்லிய மான முடிவையும், திருத்தத்தையும் பழக்கத்தில் கொண்டு வர முடியும்


(இ) முடிவுகளின் உறுதித்தன்மை : 

                                                    அகவயத்தன்மைக்கு இடமில்லாத ஒரு பாடம் கணக்குப்பாடம். சரி அல்லது தவறு என்பதில் இரு வேறுபட்ட கருத்துகள் இருக்க முடியாது. அதேநேரத்தில் மாணவர்களேதங்களுடைய முடிவுகளைச் சரிபார்த்து உறுதி செய்து கொள்வதற் கான வாய்ப்புகளும் கணிதப் பாடத்தில் உண்டு. ஒரு குழந்தை கணிதச் சிக்கலைத் தானே தீர்த்து, முடிவு சரியானதுதான் என உறுதிப்படுத்திக் கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். தன் முயற்சியால் ஏற்படும் மகிழ்ச்சி வாழ்க்கைச் சூழலில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சிந்திக்கும் ஆற்றல் போன்ற நற்பண்புகளைக் குழந்தைகளின் மனத்தில் வளர்க்கிறது. கணக்குப் பாடத்தில் பல சூழல்களைச் சந்திக்கும் ஒரு குழந்தை, தன்னுடைய முழு ஆளுமை வளர்ச்சிக்கு உகந்த, பகுத்தாராய்தல், சுயசிந்தனை நெளிவு, துல்லியம், முடிவுகளைப் பொதுப்படுத்துதல் போன்ற பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ள முடியும். கணக்குக் கருத்துகளை மட்டுமன்றி, பொதுக் கருத்துகளை வளர்த்துக் கொள்ளும் சூழலையும் திறனையும் இப்பாடம் அளிக்கிறது.