வாழ்க்கைப் பயன்கள் அல்லது சமுதாயப் பயன்கள் (Social values)
தனி மனிதனுக்குக் கணித அறிவின் முக்கியத்துவம் :
பிறரோடு தொடர்பு கொள்வதற்கு எண்கள் சிறந்த வழிவகை களாக விளங்குகின்றன. கணிதத்தின் அடிப்படையாள களையும், உருவங்களையும், கையாளும் திறமை மனிதனுக்கு எப்பொழுது மே அவசியமாக இருந்து வந்திருக்கின்றது. அன்றாட வாழ்க்கைக்கும் எண் கணித, இயற்கணித முறைகளில் ஓரளவு ஆற்றல் தேவையாக உள்ளது. உதாரணமாக, நாம் தினந்தோறும் செய்கின்ற கொடுக்கல், வாங்கல், பணத்தை எண்ணுதல், நேரத்தை அறிதல், நாட்காட்டியைப் பயன் படுத்துதல், விளையாடும் இடங்கள் அமைத்தல், வரவு செலவுக் கணக்கு வைத்துக் கொண்டிருத்தல், வரிகளைக் கணக்கிடுதல் போன்ற செயல்களில் கணிதத்தைப் பயன்படுத்துகிறோம்
தற்காலத்தில் சமூகத்தில் அடிப்படை எண்கணித அறிவை விட அதிகமான கணித அறிவு தேவைப்படுகின்றது. சில பொருள்களை ரொக்கமாக வாங்கக்கூடிய நிலையில் உள்ளோமா, அல்லது தவணை முறையில் வாங்குகிறோமா, வீட்டை விலைக்கு வாங்குவது சிறந்ததா, அல்லது வாடகை வீட்டில் இருப்பது சிக்கனமானதா என்பவை போன்ற பிரச்சினைகளை ஆய்ந்து முடிவெடுப்பதற்குக் கணித அறிவும் திறனும் தேவை. வரிகள் எவ்வாறு வசூலிக்கப்படுகின்றன வென்றும், முதலீடுகள் திருப்பிக் கொடுக்கும் போது எவ்வாறு கணக்கிடப்படுகின்றன வென்றும், சராசரியை எவ்வாறு கண்டு பிடிக்கிறோம் என்றும், வாழ்க்கைச் செலவுக் குறியீட்டு எண் (Cost of living index) எவ்வாறு கண்டு பிடிக்கிறோமென்றும் தெரிந்து கொள்வதற்குக் கணித அறிவு தேவை. வாழ்க்கைப் பிரச் சினைகள் பலவற்றையும், பொருளாதாரச் சமூக அடிப்படை யிலேயே நோக்குகிறோம், வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதா அல்லது தாழ்ந்துள்ளதா என்பதையும், தனிப்பட்டோர் வருமானங் கள், உற்பத்தி போன்றனவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வாழ்க்கைச் செலவுக் குறியீட்டு எண்களைப் புரிந்து கொள்ள முடியாமல் வயது வந்தோரும் தவிக்கின்றனர். இவ்வாறு சமூகத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள கணிதமானது பல வழிகளில் பயன்படுகின்றது. தொடர்ந்து மாறிவரும் நம்முடைய அறிவியல் சமுதாயத்தின் சிறந்த குடிமகனாக விளங்க விரும்புவோரின் அன்றாடக் கணிதத் தேவைகளை ஆசிரியர் கவனத்தில் கொண்டு கற்பிக்க வேண்டும்.
பொறியியல் துறைகளில் கணிதத்தின் பயன்களை வரை யறுத்துக் கூற முடியாது. உதாரணமாக, ஒரு கட்டடப் பொறி யியல் நிபுணர் 50 அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஒரு குறித்த அளவுள்ள தூண் அல்லது உத்திரம் அமைக்க விரும்பினால், அது கொடுக்கப்பட்டுள்ள பாரத்தைச் சுமக்க முடியுமா என்பதைக் கட்டடம் கட்டத் தொடங்கு முன்னரே கணித வாய்பாடு களையும், சூத்திரங்களையும் பயன்படுத்திக் கணக்கிடாமல் இருப்பாரோ? அண்மைக்கால அறிவியல் வளர்ச்சியின் விளைவு களான தொலைக்காட்சி (டெலிவிஷன்கள்), ஜெட் விமானங் கள், விண்வெளிச் செயற்கைக் கோள்கள் போன்றவற்றை நாம் பயன்படுத்துகிறோம். விமானத்தின் சிறப்பான அமைப்பைத் (design) தீர்மானிக்கவும், விமானம் எவ்வளவு வலுவுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை முடிவெடுக்கவும் கணித முறைகள் உதவுகின்றன வானொலி, ரேடார் சாதனங்களைத் தயாரிக்கவும், விமானங் களுக்கு வழிகாட்டவும், மற்ற விமாளங்களோடும், விமானத் தளங்களோடும் தொடர்பு கொள்ளவும் (செய்திகள் அனுப்பவும்) கணித முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. எவ்விதமான தொழிற்சாலைகளிலும், தயாரிக்கப்பட்ட பொருள்களின் நம்பகத்தினைக் (reliability), கணித்துக் கூறக் கணிதம் உதவுகின்றது. தொழில் துறையிலும். கணிதம் பலவாறு பயன் படுகின்றது. அதாவது, உற்பத்தியின் அளவு, எப்பொழுது உற்பத்தி செய்ய வேண்டும், கூடுதல் நேர ஊதியத்தைக் குறைப்பது எப்படி, என்பன போன்ற பிரச்சினைகளில் கணித அறிவு பயன்படுகின்றது.
கணக்கியலில் வல்லுநராக இல்லாமலிருப்பினும் பெரும் பாலோர் அன்றாட வாழ்க்கையில் கணிதத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. முக்கியமாகப் பொறியியல் நிபுணர்களுக்கும், இயற்பியலார்களுக்கும் (Physicist) கணித அறிவு இன்றியமை யாததாகும். புவியியல், மருத்துவயியல் உளவியல், நிலவியல், தொழில் நிர்வாகம் ஆகியவற்றிலும் கணித ஆய்வையும், கணிதத்தின் பல செயல் முறைகளையும் பயன்படுத்துகிறார்கள். கணக்கிலும், கணிப்பதிலும் தேர்ந்தவர் களையே தொழில், வர்த்தகத்துறைகளில் வேலையிலிருத்த விரும்புகின்றனர். கணிக்கும் இயந்திரங்களை (electronic computers) இயக்க அமர்த்துகின்றனர்
இவ்வாறாக இன்றைய வாழ்க்கையின் நிலைகளை அறிந்து கொள்ளவும், அவற்றைப் பாராட்டும் குடிமகனாக வாழவும் ஒவ்வொருவருக்கும் நல்ல கணித அறிவு தேவையாகும்.