பண்பாட்டுப் பயன்கள் (Cultural values)
உலகப் பண்பாட்டு வரலாற்றிலே கணிதத்தின் முக்கியத் துவத்தை யாரும் மறுக்க முடியாது. ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கணிதம் நம்முடைய பண்பாட்டு வளர்ச்சியில் பங்கு கொண்டுள்ளது
சமுதாயத்தில் கல்வியின் நோக்கங்கள் ஒவ்வொரு காலத்தி லும் ஒவ்வொரு விதமாக இருந்து வருகின்றது. இவற்றை முடிந்த அளவு நிறைவேற்றுவது கணிதம் கற்போரின் முக்கியமான கடமையாகும். அறிவியலும், அறிவியல் முறைகளும் மென் மேலும் முக்கியத்துவம் பெற்றுவரும் நம் சமுதாயத்தில் எண்களைப் பயன்படுத்துவதில் நல்ல தேர்ச்சியும், அடிப்படைக் கணித முறைகளில் ஆற்றலும் அளிப்பது கல்வி முறையின் முக்கிய நோக்கமாகும். மனித நாகரிக வளர்ச்சியில் கணிதம் கொண்டுள்ள முக்கியமான பங்கைப் பற்றி அறிந்து கொள் வதிலேயே ஒரு சிறந்த பண்பாட்டுப் பயன் உள்ளது. ஹாக்பள் என்ற கணித மேதை 'கணிதம் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி (Mathematics is the mirror of civilization) என்று கூறுகிறார். நாகரிகம் மேலும் வளர்வதற்குக் கணித அறிவு இன்றியமையாததாகும். பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் கணித அடிப்படையில் தோன்றிக் கணிதத்தைச் சார்ந்தே வளர்ந்தும் வந்துள்ளன. நம்முடைய முன்னோர்களுக்கு எண்ணவும், அளக்கவும், கணக்கிடவும் தேவை ஏற்பட்டபோது கணிதம் தோன்றியது. தொடர்ந்துவந்த சந்ததியினர், முன்னோர் கண்டுபிடித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல புதிய கணிதமுறைகளைப் பெரும்பாலும் தேவையை முன் னிட்டே கண்டுபிடித்தனர். நம்முடைய சுற்றுப் புறத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குக் கணித அறிவு தேவை. கணித மேதையான பிதாகரஸ், எண் கணிதம் என்பது வெறும் கணக்கீட்டை மட்டும் குறிப்பதன்று என்று உணர்ந்தார். இவர்,வாணிகத் துறையிலும், சொத்து மதிப்புகளைக் கணிப் பதிலுமே பயன்பட்டு வந்த கணித முறைகள், அறிவியல் வளர்ச்சிக்குத் தேவைப்பட்டன. மருத்துவ முறைகளில் கூட பெரும்பாலும் கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்தியே நோய்களைக் கண்டு பிடித்தனர். (இரத்தப் பரிசோதனைகள்). எனவே கணிதத்தின் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் உணர்ந்து கணிதப் படிப்பைத் திட்டமிட வேண்டும். நம்முடைய நாகரிக வளர்ச்சியில் கணிதம் கொண்டுள்ள பங்கை உணர்ந்து பாராட்ட வேண்டும். நம்முடைய தற்கால நாகரிகமானது இயற்கைச் சக்திகளையும், அறிவின் ஆழத்தையும் சார்ந்துதான் இருக்கிறது என்று கூறுவோமானால் இதற்கு உண்மையான அடிப்படை, கணிதம் சார்ந்த அறிவியலேயாகும்.