செயல் திட்ட முறை (Project Method) - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, November 24, 2020

செயல் திட்ட முறை (Project Method)



மாணவர்கள் தாங்கள் வாழும் சமுதாயச் சூழ்நிலைக்குத் தகுந்த முறையில் தங்கள் மனத்தை ஒருவழிப்படுத்தி எந்தச் செயலையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் செய்வதைச் செயல் திட்டமுறை என்கிறார் டாக்டர் கில் பாட்ரிக் என்ற மேதை. ஸ்டீவன்சன் (Stevenson) என்பவர் 'இயல்பான சூழ்நிலையில் பிரச்சினையின் முடிவுகாணுதல் என்கிறார் (A Project is a problematic act carried to completion in its natural setting).


ஆகவே, செயல்திட்டத்தை மனம் விரும்பிச் செய்யும் வாழ்க்கை அனுபவம் என்று கூறலாம். ஒவ்வொரு நாளும் நாம் திட்டமிடுகின்றோம்; செயற்படுகின்றோம். வாழ்க்கையே பல செயல்முறைத் திட்டங்களால் ஆனதுதானே! பிரச்சினையைத் தீர்க்கும் மனநிலையை இவற்றுள் ஒன்றாகக் கூறலாம். 

கற்கும் ஒவ்வொரு பொருளுக்கும் குறிக்கோள் இருக்க வேண்டும் என்று இம்முறை வலியுறுத்துகின்றது. குழந்தைகள் தாங்கள் பள்ளியில் செய்யும் பல காரியங்களின் கருத்தையும் அவற்றை எதற்காகச் செய்கிறார்கள் என்பதையும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று இம் முறை வலியுறுத்துகின்றது. இம் முறைப்படி கற்கும் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியில் உண்மையான வாழ்க்கைச் சூழலில் செய்திகளை அறிந்து கொள்கின்றனர். ஏட்டுக் கல்விக்கு இங்கு இடமில்லை.

செயல் திட்டங்களின் குறிக்கோள்கள்


1 . மாணவர்களின்  ஆர்வத்தைத் தூண்டி வளர்த்தல்


2 .  தானே படைக்கும் ஆற்றலையும், தன் முயற்சியையும் தன்னம்பிக்கையையும் வளர்த்தல்


3. உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணருதல். 

4 . புதிர்களை விடுவிக்கும் திறமையை வளர்த்தல்


5 . தானே சிந்திக்கும் திறனையும் நுண்ணறிவுத் திறனையும் வளர்த்தல்


6. உடன் பயிலும் மாணவருடன் சேர்ந்து செயல்படுவதால் சமுதாயக் கட்டுப்பாட்டு முறைகளைத் தூண்டுதல் முதலியவை இந்தத் திட்டத்தின் சில நோக்கங்களாகும்


எந்த ஒரு செயல்முறையும் வெற்றிகரமாக அமைய வேண்டுமாயின் அது நடைமுறைக்கு ஏற்றதாகவும், வாழ்க்கைக்குப் பயன்தரத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும். இருப்பினும் இவற்றைத் தேர்ந்தெடுக்கும் விதமே இம் முறையின் வெற்றிக்கு அடிப்படை யாகும்.