கற்பித்தலில் தொழில் நுட்பத்தின் பங்கு - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, November 25, 2020

கற்பித்தலில் தொழில் நுட்பத்தின் பங்கு


பல நாடுகளில் கற்பித்தலில் தொழில் நுட்பத்தைப் (Educational Technology) பயன்படுத்துகின்றனர். நமது நாட்டில் இது ஒரு முன்னோடித் திட்டமாக ஒரு சில பள்ளிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி செய்திகளை யாவருக்கும் அறிவிப்பது நமக்குத் தெரிந்ததுதான் ஆனால் நல்லாசிரியர்கள் எண்ணிக்கை தேவையான அளவு இல்லாததால் ஒரு சில நல்லாசிரியர்கள் தொழில் நுட்ப உதவியுடன் மிக அதிக எண்ணிக்கையில் மாணவர்க்குக் கற்பிக்க முடியும். 



ஆகவே இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள் முன் வரவேண்டும். பல ஆசிரியர்களும் மாணவரும் இந்த முறையைப் பயன்படுத்த முன்வந்தால்தான் இந்த புதிய முறை, மெய்யாகவே கற்பித்தலில் முன்னேற்றத்தை உருவாக்கும். ஒளிநாடாப் படங்கள், (Video films), ஒளி விளையாட்டுக்கள் (Video games), குறுந்தகடுகள் (Compact discs) இவை இன்று பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன இத்தகைய நிலையைக் கல்வி கற்பிப்பதிலும் உருவாக்கினால் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

பாடநூல்களில் இருப்பதை வகுப்பில் பாடம் நடத்துவது  போன்ற ஒளிநாடாப் படம் எடுத்து அதை வகுப்புகளில் பயன்படுத்துவதைவிட பாடநூலில் உள்ளதை நிதர்சன வாழ்க்கையில் உள்ள நிகழ்ச்சிகளையும் இணைத்து எடுக்கப்படும் படங்கள் மிகுந்த பயனைத் தரும்

இன்றைக்கு வகுப்பு அறையில் சில மாணவர் பாடம் படிப்பதையே ஒரு சுமையாகக் கருதும் நிலை மாற வேண்டும் என்றால் பாடநூலும் அன்றாட வாழ்க்கையில் வரும் அனுபவங்களையும் இணைத்துக் கற்பிக்கும் நிலை உருவாக வேண்டும். 

அதற்கு இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றம் பெரிதும் பயன்படும் மாணவர்களும் ஆசிரியரும் இணைந்தே தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ஒளி நாடாப்படங்கள், குறுந்தகடுகள் உருவாக்கி அதன்படி அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.