2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் 14.11.2022 முதல் 12122022 வரையிலான நாட்களில் EMIS தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பார்வையில் காணும் செயல்முறைகள் மற்றும் கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
தற்போது சில பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பணியினை மேற்கொள்வதற்கு கூடுதல் காலஅவகாசம் கோரியதால், EMIS தளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்யும் பணியினை மேற்கொள்ள 19,122022 வரை மேலும், கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது, மேற்குறிப்பிட்ட பணிகளை EMIS தளத்தில் மேற்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பாகும்.
எனவே. முதன்மைக் கல்வி அலுவலர்கள். தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மேற்குறிப்பிட்ட விவரத்தினை தெரிவித்து, EMIS தளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ஈரிபார்த்து திருத்தங்களை மேற்கொள்ளும் பணியினை 18.12.2022-க்குள் நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
( PDF File ஐ Download செய்ய கீழே சிவப்பு நிறத்திலுள்ள உள்ள Click Here to Download என்பதை கிளிக் செய்யவும். )
Nominal Roll Correction
அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு - PDF
👇👇👇