தேசபக்தி - குடியரசு தின வாழ்த்து கவிதை
நாட்டுப்பண் பாடியதும் - உடல்
நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள் களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி !
கொடியேற்றி சுதந்திர தினம்
கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-சாதி
கொடுமைகள் செய்ய நினைக்காத
கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..
பாரதமாதா படத்தினை வைத்து குனிந்து
பணிவது மட்டுமல்ல தேசபக்தி-உயர்
பட்டம் பெற்றும் பலநாட்டில் வசியாமல் -நம்
பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....
தியாகிகள் பெருமை நினைந்து
தினம்பேசுவது மட்டுமல்ல தேசபக்தி
தனித் திறமையதை வளர்த்து உலகில் - நம்
தேசத்தின் புகழ் உயர்த்துவதே தேசபக்தி !.....
இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே
இயம்புவது மட்டுமல்ல தேசபக்தி-நம்
இனஒற்றுமை,இயற்கைவளம் சீரழியாமல்
இதயம் வைத்து காப்பதே தேசபக்தி !..
தாய் நாடு குடியரசு தினம்
தாய்க்கு தலைமகன்
என் இந்தியா நாட்டின் குடிமகன்
தேசத்திற்காக போராடியா வீரமகன்
விடுதலை பெற்ற வெற்றி மகன்
வெள்ளையனே வெளியேறு
விடுதலையை நீ கொண்டாடு
அகிம்சை வழியில் போராடு
மகாத்மா காந்தியின் துணையோடு
சாதிகளை மறந்திடு அம்பேத்கரை நினைத்திடு
கொடி காத்த குமரனாய் வாழ்ந்திடு
பல தலைவர்களின் தியாகத்தை மதித்திடு
குடியரசு தினத்தில் உறுதி எடு
நாட்டுக்காக நீ உழைத்திடு
தாய் நாட்டை காதலித்திடு
நெஞ்சிலிருத்தி சபதமேற்போம்
நெஞ்சிலிருத்தி சபதமேற்போம்
கம்பத்திலேறிய
கொடிதனை பாரினில்
கம்பன் கவிகள் போல்
உயரச்செய்வோம்...!
வல்லரசாதலென்பது
வாயினில் மட்டும்
வாசம் செய்தலாகாது!
நன்னெறிகளை
வாழ்வினிலிறுத்தி
நல்லரசமைக்க
முயற்சிப்போம்...!
தலையாய வழிதனில்
தாய்நாட்டை செலுத்தி
தலைவிதியென்பதை
தலைச்சுற்றியெறிந்து
அரும்பாடுபட்டு
நாம் பெறாவிட்டாலும்
ஆன்றோர் தந்த
சுதந்திரம்தமை
தக்கவைத்து
தக்கையாகிப் பறக்கும்
மனிதநேயத்தை,கலாச்சார
த்தை மீண்டும்
நிலைப்பித்து...
நல்லதொரு குடியாய்
பாரினில் நம்நாடு திகழ
குடியரசு தினமென்று
கூறி மகிழ்ந்திடும்
இந்நாளில்
நற்பொன்னாளில்
நாமனைவரும்
நெஞ்சிலிருத்தி
சபதமேற்போம்!!!
காதல் தேசம் குடியரசு தினம்
ஓற்றுமையாய் வாழ்ந்திடு
சாதி மதங்களை மறந்திடு
மக்கள் ஆட்சி மலர்ந்திடு
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடு
சட்ட திட்டங்களை மதித்திடு
வரும் சத்தியா சோதனைகளை
கடந்திடு
நாம் நாட்டுக்காக உழைத்தவர்களை
நினைத்திடு
கொடிகாத்த குமரனை போற்றிடு
கடமை,கண்ணியம், கட்டுபாடு என
வாழ்ந்திடு
நாட்டுக்காக உழைக்கும்
இராணுவத்தில் நீ சேர்ந்திடு
தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்
தியாகத்திற்கு தலைவணக்கு
நாம் தேசிய கொடியை வானில்
உயர பறக்கவிடு
நாம் இந்தியா நாட்டை உயரத்தில்
வைத்துவிடு
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
குடியரசு தின கவிதை
ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் வெற்றிவாகை சூடிய தினம்
குடியரசு தினம்
உப்புசத்தியாகிரகங்களால்
தன்
உடல்களை வருத்தி
தாயகத்திற்க்கு
பெருமைத்தேடித்தந்த தினம்
தன் குருதிகளையும்
தன் தேகங்களையும்
தன் தாய்நாட்டிற்காக
அர்ப்பணம் செய்தவர்களை
நினைவுக்கூறும் தினம்
தன் வம்சா வழியினர்கள்
வசந்தமாய் வாழ
தன் வாழ்நாட்களை
வலியுடன் கழித்தவர்களை
வருத்தமுடன்
நினைக்கும் தினம்
சுதந்திரக்காற்றை
நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம்
தூக்கியெறிந்த தியாகிகளின்
தியாக தினம்
நம் தாய்நாட்டினை
அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாடுபட்டவர்களை இன்றுமட்டும்
நினைப்பதில் நியாயமில்லை
எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தார்களோ
அதைகண்ணியத்துடன்
காத்துக்கொள்ளவேண்டியது
நம்கடமை
சுதந்திரக்காற்றை சுகமாய்
அனுபவிக்கும்
நம் சுதந்திரகொடிபோல்
நாமும் நமக்காக பாடுபட்டு
வாங்கித்தந்ததை பத்திரப்படுத்தி
வாழ்வோமாக
நாட்டை நினைக்கும்போது
நாட்டுக்காக
போராடியவர்களையும்
நினைவுகூறுவோமாக.
அத்தனைபேரையும்
புகழ்ந்து போற்றுவோம்
எந்தாய்திருநாட்டில்
வாழும் கோடானகோடி
மக்களுக்கும்
உலகம் முழுவதும் இருக்கும் என்
இந்தியமக்களுக்கும்
என்அன்பான
குடியரசு தின வாழ்த்துகள்.
இடைவெளி இல்லா காற்றாய்
பாரதம் எங்கும் சமத்துவம் தொடர
நகருகின்ற தனி ஊசலாய்
சம உரிமை தொடர்ந்து நீடிக்க
காலம் காட்டும் கடிகாரமாய்
அனைவருக்கும் ஒரே சட்டம்!
அன்று முதல் இன்று வரை
முடிவை எட்டா தீப ஒளியாய்
வேற்றுமையில் ஒற்றுமை
நம்மோடும் நம் உணர்வோடும்
தினமும் பயணம் செய்ய
வழி வகுத்த அரசியல் அமைப்போடு
அனைவரும் பயணிப்போம்!
இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!