ஆதார் எண் கொடுத்தால் 5 நிமிடத்தில் PAN Card இனி பான் கார்டு பெறலாம் சுலபமான வழி Instant PAN Allotment Through Aadhaar - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, June 11, 2021

ஆதார் எண் கொடுத்தால் 5 நிமிடத்தில் PAN Card இனி பான் கார்டு பெறலாம் சுலபமான வழி Instant PAN Allotment Through Aadhaar

 ஆதார் எண் கொடுத்தால் 5 நிமிடத்தில் PAN Card இனி பான் கார்டு பெறலாம் சுலபமான வழி 


ஆதார் அடிப்படையிலான e-KYC மூலம் உடனடி பான் பெறுவதற்கான முக்கிய தேவைகள் பின்வருமாறு:


1 . விண்ணப்பதாரர் இதற்கு முன் மற்றொரு பான் உடன் இணைக்கப்படாத செல்லுபடியாகும் ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

2 . விண்ணப்பதாரரின் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்.

3 . ஆதார் வசதி மூலம் உடனடி பான் ஒரு காகிதமற்ற செயல்முறையை வழங்குகிறது என்பதால், விண்ணப்பதாரர்கள் எந்த KYC ஆவணங்களையும் சமர்ப்பிக்கவோ அல்லது பதிவேற்றவோ தேவையில்லை.

4 . விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் வைத்திருக்கக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட செல்லுபடியாகும் பான் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 272 பி (1) இன் விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும்

ஆதார் மூலம் உடனடி பான் விண்ணப்பிக்க எப்படி ? 
வழிமுறைகள் : 


Step 1 :

முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.





Step 2 :

Instant PAN  ஒதுக்கீடு வலைப்பக்கத்திற்கு செல்ல  முகப்புப்பக்கத்தின் Quick Links பிரிவின் கீழ் உள்ள ‘Instant PAN through Aadhaar’ என்பதை  சொடுக்கவும்.






Step 3 :

‘Get New PAN’ என்பதை Click செய்யவும்.





Step 4 :


PAN  ஒதுக்கீட்டிற்கான உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். பின்னர் CAPTCHA கோடினை உள்ளீடு செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெற ‘Generate Aadhaar OTP’ என்பதைக் கிளிக் செய்க. ( உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தும் முன் நீங்கள் உள்ளீடு செய்தவை சரிதானா என்பதை  மீண்டும் ஒருமுறை  சரிபார்க்கவும். )




Step 5 :

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஆதார் OTP ஐ உள்ளிட்டு, விவரங்களை UIDAI உடன் சரிபார்க்க Agree என்பதை Tick செய்து , ‘Validate Aadhaar OTP and Continue’ என்பதை  கிளிக் செய்யவும்.





Step 6 :

தற்போது PAN எண் பெறுவதற்கான பக்கம் தோன்றும் . இதில் அணைத்து விவரங்களையும் மீண்டும் சர்பார்த்து "Accept the terms and conditions" என்பதை Tick செய்து ‘Submit PAN Request’  என்பதை Click செய்யவும்.



Step 7 :

சரிபார்ப்புக்காக உங்கள் ஆதார் விவரங்களை சமர்ப்பித்தவுடன்  Acknowledgement number வழங்கப்படும். உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு PAN allotment status நீங்கள் காணலாம்.







எவ்வாறு PAN DOWNLOAD செய்வது ? 
( Check Status/Download Instant PAN )


Step 1 :

முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.




Step 2 :

Instant PAN  ஒதுக்கீடு வலைப்பக்கத்திற்கு செல்ல  முகப்புப்பக்கத்தின் ‘Quick Links’ பிரிவின் கீழ் உள்ள ‘Instant PAN through Aadhaar’ என்பதை  சொடுக்கவும்.






Step 3 :

"Check Status/Download PAN" என்பதை Click செய்யவும்.




Step  4 :

ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். பின்னர்  ‘Submit’ ஐகானைக் கிளிக் செய்யவும் .



Step 5 :

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ குறிப்பிட்ட கால எல்லைக்குள் உள்ளிட்டு உங்கள் கோரிக்கையை சரிபார்க்கவும். அடுத்த பக்கத்திற்குச் செல்ல ‘Submit’ பட்டனைக்  கிளிக் செய்யவும் 




Step 6 :

 உங்கள் பான் ஒதுக்கீடு கோரிக்கையின் நிலையை நீங்கள் சரிபார்க்கக்கூடிய புதிய பக்கத்திற்கு நீங்கள் செல்வீர்கள் .

Step 7 : 

உங்கள் PAN  ஒதுக்கீடு வெற்றிகரமாக இருந்தால், உங்கள் PAN  கோப்பைப் பதிவிறக்க 10 நிமிடங்களுக்குள் ஒரு PDF இணைப்பு உருவாக்கப்படும்.





குறிப்பு : 

உங்கள் PAN எண்  கொண்ட PDF கோப்பு கடவுச்சொல்லால்  பாதுகாக்கப்பட்டதாகும். PDF கோப்பைத் திறக்க கடவுச்சொல்லாக ‘DDMMYYYY’ வடிவத்தில் உங்கள் பிறந்த தேதியைப் பயன்படுத்தவும். 

மாதிரி PAN  PDF கோப்பு கீழே உள்ளது போன்று  இருக்கும்:





தொடர்புடைய செய்திகள் :