பான் - ஆதார் இணைப்பது எப்படி?
ஆதார் கார்டு உள்ள அனைவரும் அவர்களது பான் கார்டையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜூன் 30 வரையில் மட்டுமே உள்ளது. காலக்கெடு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் இணைத்து வருகின்றனர். ஆனால், பலருக்கு அவர்களது ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே தெரியாமல் இருக்கும். அதை அவர்களே மிக எளிதாக ஆன்லைன் மூலமாக இணைக்க முடியும் .
எவ்வாறு இணைப்பது?
Step 1 :
முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
பின்னர் Link AAdhaar என்பதை Click செய்ய வேண்டும்.
பின்னர் Link AAdhaar என்பதை Click செய்ய வேண்டும்.
அதன் பிறகு பின்வருவனவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
- பான் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- மூன்றாவதாக ஆதார் எண்ணில் உள்ளது போன்று பெயரை பதிவு செய்ய வேண்டும். ( பிழையில்லாமல் பதிவு செய்ய வேண்டும் )
- அதன் கீழ் AGREE என்ற இடத்தில் டிக் செய்ய வேண்டும்.
- Captcha கோடினை Enter செய்ய வேண்டும்.
- கடைசியாக Link Aadhaar என்பதை
கிளிக் செய்தால் நமது PAN Number ஆதாருடன் இணைந்துவிடும்.
Official Link